தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சச்சின் என்ற வாலிபர் காதலித்ததால், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த குரூரமான கொலை சம்பவம் நேற்று முன்தினம், அதாவது மே 17ம் தேதி இரவு ஒரு திறந்த வெளியில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சச்சினின் ஆடைகளை அவிழ்த்து, அவரை உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற கூறிய ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். பிறகு அரிவாளால் அவரது கழுத்து, தாடை, கைகளில் கொத்துக் கொத்தாக வெட்டியுள்ளனர். அவரது ஆணுறுப்பை முழுவதுமாக அறுத்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். சச்சின் காதலித்த பெண், தமிழகத்தின் மிகப் பிரபலமான ஒரு அரசியல் கட்சியுடைய பிரமுகரின் ஆதரவளார் மகள் என கூறப்படுகிறது. சாதி ரீதியாக நிகழ்த்தபட்ட சம்பவம் எனவும் கூறப்படுகிறது.