வைகோ அரசியலிலிருந்து வெளியேறுகிறாரா? வெளியேற்றப்பட்டாரா?

ம.தி.மு.க. தலைவர் வைகோ, அரசியலிலிருந்து நிரந்தரமாக வெளி.யேற முடிவெடுத்துள்ளதாக..

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் தானாக முன்சென்று சிறைவாசத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோ, அரசியலிலிருந்து நிரந்தரமாக வெளியேற முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏறிய மேடைகளிலெல்லாம் சர்வதேச வரலாற்று கதாபாத்திரங்களை சோப்பு போட்டு விளக்கக் கூடியவராக திகழ்ந்து கொண்டிருந்த வைகோ, ஆடி ஓய்ந்துள்ள பரபரப்பான அரசியல் சூழலின் சூட்டோடு சூடாக சிறைவாசம் அனுபவிக்கச் சென்றுவிட்டார். அதற்கு முன்பாக கருவேல மரங்களை ஒழிப்பதற்காக, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்ட ஊர் ஊராக அரிவாள் ஆயுதங்களுடன் வலம் வந்துகொண்டிருந்தார்.

16-1494915153-vaiko9455667

அவரால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள்நலக் கூட்டணியும், அதில் இருந்தவர்களும் தேர்தலில் டன் கணக்கில் மண்ணைக் கவ்வ, அந்த கூட்டணியின் கூடு அப்பளமாக நொறுங்கிப்போனது. அ.தி.மு.க.வின் பி டீமாகவே ம.ந.கூட்டணி உருவாக்கப்பட்டதாகவும், அதற்காக வைகோ ஜெயலலிதாவிடம் ரூ. 1200 கோடி பெற்றதாகவும் கூறப்பட்டது. அதை முழுவதுமாக மறுத்தார் வைகோ.

தற்போது புழலில் சிறைவாசம் அனுபவித்துவரும் வைகோவை ம.தி.மு.க.வினர் கூட்டம் கூட்டமாக சென்று சந்தித்துப் பேசி வருகின்றனர். ம.தி.மு.க. கட்சியாக இருப்பதை கலைத்துவிட்டு இயக்கமாக மாற்ற முடிவெடுத்துள்ளாராம் வைகோ. மேலும் அரசியலிலிருந்து வெளியேறவும் முடிவெடுத்துள்ளாராம்.

தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவும் இந்நேரத்தில் வைகோ இம்முடிவினை எடுப்பார் என்பதை அவரது ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. தமிழக அரசியலில் வேரூனிக்கொள்ள தீவிரமாக முயற்சித்து வரும் வேளையில், வைகோவின் அரசியல் அஸ்தமனத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் தெரியாமல் விழிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *