ஜி.எஸ்.டி. பற்றிய புரளிகளும், உண்மைகளும்..!! [வணிகர்களுக்கு]

நாடு தழுவிய அளவில் ஜூலை 1ம் தேதியில் இருந்து புதிய சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சீர்திருத்தம் குறித்து எவ்வகையில் உண்மைகள் வெளியாகின்றனவோ அவ்வளவில் புரளிகளும், கட்டுக்கதைகளும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களிடையே காணப்படுவதாக தெரிவிக்கப்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் நோக்கத்தில் கற்பனைகள் மற்றும் உண்மைகள் என்ற தலைப்பில் பி.பி.சி. தமிழ் ஏழு முக்கிய அம்சங்களை பட்டியலிட்டுள்ளது. அதை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

 

கற்பனை: விலைப்பட்டியலை(Bills) இணையதள வசதியுடைய கணினி மூலமே உருவாக்க வேண்டும்.
உண்மை: விலைப்பட்டியல் ரசீதுகளை கையாளும் எழுதிக் கொடுக்கலாம்.

கற்பனை: ஜி.எஸ்.டி. மூலம் தொழில் செய்ய தொடர் இணைய வசதிகள் தேவை.
உண்மை: மாதாந்திர தொழில் கணக்கை தாக்கல் செய்யும்போது மட்டும் இணையம் போதுமானது.

கற்பனை: தற்காலிக அடையாள எண் மட்டுமே உள்ளது; இறுதி எண்ணுக்காக காத்த்ருக்கிறேன்.
உண்மை: தற்காலிக எண் என்பதே போதுமானது; இதைக் கொண்டே தொழில் செய்யலாம்.

கற்பனை: மாதம் 3 முறை கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்,
உண்மை: மாதம் ஒரு முறை மட்டுமே கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது.

கற்பனை: சிறு வியாபாரிகள் விற்பனை ரசீது வாரியாக கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
உண்மை: சிறு வியாபாரிகள் மொத்த விற்பனையின் சுருக்கத்தை மட்டும் தாக்கல் செய்தால் போதும்.

கற்பனை: முந்தைய மதிப்புக் கூட்டு வரியுடன் ஒப்பிடும்போது ஜி.எஸ்.டி. வரி அதிகம்
உண்மை: முன்பு கலால் வரி மற்றும் பிர வரிகள் மறைமுகமாக இருந்தன. அந்த வரிகள் ஜி.எஸ்.டி. மூலம் வெளிப்படையாக வசூலிக்கப்படுகின்றன. இதனால் அதிகம் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

Prev Page Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *