ஆர்.கே. நகரில் களமிறங்கிய இளம் சிங்கங்கள்!

தமிழகத்தைப் பொறுத்தவரை சைபர் கிரைம் குற்றங்கள் நிகழ்ந்த காலம் மலையேறி, ஆக்கப்பூர்வமாக பேசும் காலம் வந்துவிட்டது என்பதை முன்னாள் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நமக்கு உணர்த்திவிட்டன…

மிழகத்தைப் பொறுத்தவரை சைபர் கிரைம் குற்றங்கள் நிகழ்ந்த காலம் மலையேறி, ஆக்கப்பூர்வமாக பேசும் காலம் வந்துவிட்டது என்பதை முன்னாள் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நமக்கு உணர்த்திவிட்டன. பொது இடத்தில் போராட தடை போட்டார்கள். எங்களுக்கு பொது தளம் என ஒன்று இருக்கிறது என சொல்லி சமூக ஊடகங்களை களமாக்கிக் கொண்டோம். உலகப் பார்வையையே நம் பக்கம் இழுத்து, நியாயங்களை இவ்வுலகினுக்கு தெரியப்படுத்தி, களத்தில் வெற்றியும் பெற்றோம். இவ்வாறு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு மீட்டெடுப்பு போராட்டங்கள் சர்வதேச அளவில் மீப்பெரும் தமிழிய தலைநிமிர்வை ஏற்படுத்தின. ஒரு தவறான சர்வதேச வணிகத்திற்கு எதிராக போராடி, அதில் வெற்றியையும் பெற்று, பாரம்பரியத்தை மீட்ட இளைய தலைமுறையினர் மீது மக்களுக்கு மதிப்பும், நம்பிக்கையும் அபாரமாக உயர்ந்தது.

jallikattu-protest-759

இந்த போராட்டத்தின் போது ஒன்றிணைந்து பணியாற்றிய இளைஞர்கள் இன்று மீண்டும் ஒரு இலக்கினை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்தான் அவர்களுடைய இலக்கு. பொத்தாம்பொழுதும் மொபைலும் கையுமாக இருந்தவர்களிடம், வேண்டுமென்றே வம்பு இழுத்த அரசியல்வாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் ஆயுதமாக இந்த இடைத்தேர்தலை கையில் எடுத்துள்ளார்கள் அந்த இளைஞர்கள்.

வாருங்கள் மக்களே இனி ஒரு விதி செய்வோம். தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைப்போம் என்ற அழைப்புடன் ‘தமிழ்நாடு இளைஞர்கள் கட்சி’யை தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தங்கள் கட்சியை அறிமுகப்படுத்தியும் உள்ளனர். ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் பெருவாரியான பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்று வருகின்றனர்.

செய்தி ஊடகங்களின் உதவியை எதிர்நோக்காமல், எங்களால் எதுவும் முடியும் என்ற திடகாத்திரமான மன உறுதியுடன் சமூக தளங்களில் விறுவிறுப்பாகவும், உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் புதிய கட்சிக்கு நிதியுதவியும், பாராட்டுகளும், ஆதரவுகளும் குவிந்த வண்ணமாக இருக்கிறது. இவர்களுக்குப் பின் உந்துசக்தி என ஒருவர் இல்லை, ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள்.

17349107_1502665943140872_1240392053_o

சமூக ஊடகம் மூலமாக தன்னறிவிப்பை நிலைநிறுத்திக் கொண்டுள்ள இவர்கள், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கூட்டுணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோழனே… நண்பனே.. உங்கள் உதவி தேவை என தேர்தல் பிரச்சார நிதி கோருகிறார்கள். தேர்தல் களப்பணியில் ஈடுபட விரும்பும் அலுவல்தாரிகள், விடுப்பு எடுத்து வந்து பணிகளில் ஈடுபடுகிறார்கள். வா தோழா, வீதியில் இறங்கி போராட வேண்டிய சரியான தருணம் இதுவே… இளைய சமுதாயத்தின் அங்கத்தினரான நாம் வந்துவிட்டோம் என்பதை இந்த உலகுக்கே உரக்கச் சொல்லுவோம் என அழைக்கிறார்கள். வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை வைத்து மட்டும் நம்மால் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதிலும் தெளிவுடன் இருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் லைக்கையும், கமென்ட்டையும் மட்டும் இட்டுக்கொண்டிருக்காமல், சாமானியனையும் தங்களுடன் போராட அழைக்கிறார்கள். இதையடுத்து ஆர்.கே. நகரில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் குவிந்து வருகின்றனர்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *