3 நாட்களுக்கு திருப்பதி லட்டு கிடைக்காது என தேவஸ்தானம் அறிவிப்பு!

திருமலை ஏழுமலையான் கோவிலில் சுவாமியின் திவ்ய தரிசனத்திற்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 3 நாட்களுக்கு வழங்கப்படமாட்டாது

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் சுவாமியின் திவ்ய தரிசனத்திற்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 3 நாட்களுக்கு வழங்கப்படமாட்டாது என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

lordbalaji

ஏழுமலையான் சுவாமியை தரிசிக்க நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் திவ்ய தர்சனத்திற்கு செல்லும்போது லட்டு பிரசாதம் வழங்கப்படும். ஆனால் நாளை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படமாட்டாது என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

laddu1

இந்த அறிவிப்பை ஒட்டி, கோவில் வளாகத்தில் உள்ள லட்டு விற்பனையகங்களில் வழக்கத்தை விட பன்மடங்கு பக்தர்கள் லட்டு வாங்க குவிந்துள்ளனர். லட்டு தயாரிப்பு கூடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கான தயாரிப்பு பணிகள் நிறுத்தபட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *