‘பாகுபலி 2’ -Trailer விமர்சனம்!

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்று கடந்த ஒன்றரை வருடமாக அலைந்து கொண்டிருந்த நமக்கு விடை அளிக்கும் விதமாக பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் இருபத்தெட்டாம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.

பாகுபலி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிபிரமாண்டமான காட்சிகள் மூலம் Trailerலேயே மிரட்டியுள்ளார் ராஜமௌலி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதீத எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்று கடந்த ஒன்றரை வருடமாக அலைந்து கொண்டிருந்த நமக்கு விடை அளிக்கும் விதமாக இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் இருபத்தெட்டாம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர்  சமூகவலைத்தளங்களில் செம்ம ட்ராஃபிக்கை ஏற்படுத்தியுள்ளது.

fullscreen-capture-3162017-40244-pm

“அமரேந்திர பாகுபலியாகிய நான், மகிழ்மதி மக்களின் உடல் பொருள் மானம் உயிர் காப்பேன் என்று, உயிர் தியாகம் செய்யவும் தயங்கமாட்டேன் என்று, ராஜமாதா சிவகாமி தேவியின் சாட்சியாக பிரமாணம் செய்கிறேன்” என பாகுபலி உரக்கச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது Trailer. இந்த தருணத்தில் மகிழ்மதி நகரத்தில் தீ சூழ்ந்த நரக மயமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. சிவகாமி அம்மையார் வஞ்சகர்களின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு, அமரேந்திர பாகுபலியின் மகனான மகேந்திர பகுபலியை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நகரிலிருந்து தப்பி ஓடுகிறார்.

fullscreen-capture-3162017-40206-pm

அனுஷ்கா (தேவசேனா) மீது பாகுபலிக்கு போட்டியாக பல்வாள் தேவனும் (ராணா) தீரா காதல் கொள்கிறார். தேவசேனாவை அடையவும், அதே சமயத்தில் மகிழ்மதியின் அரியணையைக் கைப்பற்றவும் பல்வாள் தேவன், பாகுபலியை கொல்லவும் துணிகிறார்.

fullscreen-capture-3162017-40520-pm

கட்டப்பா பாகுபலியை முதுகில் குத்தியதற்கு, அடுத்து வரும் காட்சியில் கட்டப்பாவும் பாகுபலியும் உருக்கமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது, “நீ என் அருகில் இருக்கும் வரையிலும் என்னை கொல்லும் ஒரு ஆண்மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா” என பாகுபலி சொல்கிறார்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *