காலையில் நடிப்பு… மாலையில் ஊறுகாய் வியாபாரம் செய்யும் பிரபல நடிகை!

‘கல்யாண பரிசு’, ‘ராஜா ராணி’, ‘பூவே பூச்சூடவா’ போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் பிரபல நடிகை ஸ்ரீதேவி. முன்பாக தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவர்.

மேலும் ‘தங்கம்’, ‘இளவரசி’, ‘பிரிவோம் சிந்திப்போம்’, ‘வாணி ராணி’ போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்று வரும் ஸ்ரீதேவி எம்.எஸ்.சி. கிரிமினாலாஜி படித்துள்ளார். சி.ஐ.டி. ஆவதை தனது கனவாகவும் கொண்டிருக்கிறார்.

நடிப்பு, படிப்பு இந்த இரண்டும் சற்று ஓய்வெடுக்கும் நேரத்தில் குடிசைத் தொழிலிலும் ஈடுபடுகிறாராம். ஊறுகாய், பொடி, மசாலா போன்ற பண்டங்களை வீட்டிலேயே தனது அம்மாவுடன் சேர்ந்து தயாரித்து, அதை விற்பனை செய்து வருகிறாராம்.

ஆச்சி மசாலா, சக்தி மசாலா போல தங்கள் பண்டங்களையும் பிராண்ட் போட்டு, பெரிய நிறுவனங்களைப் போல உருவாக்க முயற்சி செய்து வருகிறாராம்.

Page Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *