தமிழினத்தின் இரத்தத்தை பல நாடுகள் பங்கிட்டு குடித்த நாள் இன்று!

இலங்கை மண்ணில் நிகழ்த்தப்பட்ட அந்த மாபெரும் யுத்தத்தில் தமிழினமே படுகொலை செய்யப்பட்டது. பெரும்பான்மை வகிக்கும் சிங்கள அரசு கடுமையான கலவரங்களை ஏற்படுத்தியும்…

லங்கை மண்ணில் நிகழ்த்தப்பட்ட அந்த மாபெரும் யுத்தத்தில் தமிழினமே படுகொலை செய்யப்பட்டது. பெரும்பான்மை வகிக்கும் சிங்கள அரசு கடுமையான கலவரங்களை ஏற்படுத்தியும், வானிலிருந்து சரமாரியாக குண்டு மழைகளை பொழிந்தும், எறிகணைகளை வீசியும், தமிழினப் பெண்களை கூட்டாக வன்புணர்ந்தும், சித்ரவதை செய்தும், இன்னும் சொல்லவியலா கொடுமைகளை புரிந்தும் ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, பிணங்களைக் கொண்டாடியது சிங்களத்து ராணுவம். சப்த நாடிகளையும் அடக்கும் இந்த குரூர இன அழிப்பிற்கு இன்னும் நீதி காணாமல் உள்ளோம். உலக வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் இன அழிப்பு மற்றும் மனிதப் படுகொலையாக திகழ்கிறது. 2009ல் நடந்த போரில் 1 சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் ஒன்றரை லட்ச தமிழர்களும், அவர்களின் தலைமுறைகளும் கடுகளவு இரக்கமும் கூட இன்றி கொல்லப்பட்டனர். வீரமரணம் எய்திய தமிழினத் தலைவர் பிரபாகரனின் ஏதுமறியாத மகன் பாலச்சந்திரன் அப்பாவித் தனமாக பிஸ்கட் சாப்பிடும் காட்சியும், கொலையுண்ட பின்பு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த உடலாக கிடக்கும் காட்சியும் ஒவ்வொரு தமிழனுடைய கண்களை விட்டு அகல மறுக்கிறது.

 

18447463_1305741759494198_1267922614086090005_n

போரின் அவலங்களை அனுபவித்து இடம்பெயர்ந்த தமிழ்ப் பெண்களை கட்டாய கருகலைப்பு செய்ய இலங்கை ராணுவம் உத்தரவிட்டது. இலங்கை மண்ணில் தமிழர்களின் வருங்கால சந்ததியினர் இருக்கவே கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட தந்திரோபாய நடவடிக்கையாகும். இவ்வாறு கருவறுக்கும் சிங்கள அரசின் வெறிக்கு தூபம் போட்டுக்கொண்டிருப்பது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் பலவும்தான். உலகில் எந்தவொரு நல்ல காரியங்களுக்காகவும் அணி சேர விரும்பாத அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 19 நாடுகள் ஒன்று திரண்டதென்றால் அது தமிழீழத்தை தீர்த்துக்கட்டுவதற்காகத்தான். குறிப்பாக இந்தியா இலங்கை அரசுக்கு மிக நெருக்கமாக, போரின் இறுதிக்கட்டம் வரை துணை நின்றது. இந்திய-இலங்கை வரலாற்றின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் தமிழினப் படுகொலைகளின் இரத்த வாடை வீசிக்கொண்டே இருக்கும்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *