வாய்ப்புகள் இல்லை… கோவிலில் பிச்சை எடுக்கும் நடிகர்!

‘காதல்’ படத்தில் நடித்த பல்லு பாபு என்ற குறுவேட நடிகர் கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார்.

‘காதல்’ படத்தில் நடித்த பல்லு பாபு என்ற குறுவேட நடிகர் கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதல்’. இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

kadhalmoviefameactor-babu-23-1498190966

இப்படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் பல்லு பாபு என்ற குறு வேட நடிகர் நடித்திருந்தார். “நடிச்சா ஹீரோதான் சார், அப்புறம் அரசியல், சி.எம்., பி.எம். என்று இவர் பேசிய சீரியஸ் காமெடி வசனம் மிகவும் பிரபலம்.

காதல் படத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வறுமையான குடும்பம் என்பதால் செலவுக்கு பணம் இல்லாமல் கோடம்பாக்கத்தில் கஷ்டப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோரும் இறந்துள்ளனர். வறுமை மற்றும் தனிமை காரணமாக கவலையில் ஆழ்ந்த பாபு, தற்போது சென்னை சூளைமேட்டில் உள்ள கோயில் ஒன்றில் பிச்சை எடுத்து வருகிறார்.

மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *