ரஷ்யாவில் Ransomware தாக்கிய கம்ப்யூட்டர் மீது தீர்த்தம் தெளித்து பூஜை…!

அறிவியலும் தொழில்நுட்பமும் பாரிய அளவில் பெருவளர்ச்சி கண்டுள்ள இந்த உலகில் சில வித்தியாசமான அல்லது விமர்சிக்கப்படுகிற நிகழ்வுகளையும், அதன் சம்பிரதாயங்களையும் உலகின் பல நாடுகள் பின்பற்றி….

அறிவியலும் தொழில்நுட்பமும் பாரிய அளவில் பெருவளர்ச்சி கண்டுள்ள இந்த உலகில் சில வித்தியாசமான அல்லது விமர்சிக்கப்படுகிற நிகழ்வுகளையும், அதன் சம்பிரதாயங்களையும் உலகின் பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. அணு ஆயுத தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ள நாடான ரஷ்யாவும் இந்த வகையில் அடக்கம் என்பது இப்போதுதான் ஊர்ஜிதமாகியிருக்கிறது. சமீபத்தில் நூற்றுக்கும் மேலான நாடுகளில் உள்ள முக்கிய சர்வர்களில் இணைந்திருக்கும் கணிப்பொறிகளை #Ransomware என்ற வைரஸ் தாக்கியதை அறிந்திருப்போம். ரஷ்யாவின் அரசதிகாரத்திற்கு உபயோகப்படுத்தப்படும் கணினிகளையும் இந்த வைரஸ் தாக்கியிருகிறது.

russia-orthodox-blessing-server

வைரஸ் தாக்கிய கணினிகளை காப்பாற்ற ஆர்தடக்ஸ் தேவாலயத்தின் பங்குத்தந்தையான பாட்ரியட்ச் கிரில் அவர்களை அழைத்து வந்து பூசை நடத்தியுள்ளனர் சில அரசு அதிகாரிகள். அவர் வைரஸ் தாக்கிய கணினிகள் மற்றும் சர்வர்கள் மீது தீர்த்தம் தெளித்து, பூசை நடத்தியுள்ளார். பாட்ரியட்ச் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதினுடன் நெருங்கிய நண்பராக இருப்பவர். ரஷ்ய அரசின் ஆஸ்தான சாமியாராகவும் திகழ்கிறார்.

உயர் தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் அரசு அலுவலகத்தில் பங்குத்தந்தையும் அவரது சீடர்களும் தீர்த்தம் தெளித்து பூசை செய்த படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் இந்த நடவடிக்கையை கேலியும் கிண்டலுமாக விமர்சித்து வருகின்றனர்.

russia-orthodox-blessing-server-3

நம் இந்தியாவில் கடவுள் இருக்கும் திருப்பதி கோவிலிலேயே Ransomware வைரஸ் தாக்கியிருக்கிறது. கடவுள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *