சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ஜெயலட்சுமியின் பிரேதம் ஆராய்ச்சிக்காக தானம்!

முருகன் மற்றும் அம்மன் மீதான பல பக்தி பாடல்களை பாடி மிகவும் பிரபலமானவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். இவர்களின் இயற்பெயர்கள் ராஜலட்சுமி மற்றும் ஜெயலட்சுமி. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய கந்த சஷ்டி கவசம் அதிகமான முருக பக்தர்களை ஈர்த்தது என சொல்வதை விட உருவாக்கியது என்றும் சொல்லலாம்.

emi_s33esx_6031_front_ed

மூத்த சகோதரியான ராஜலட்சுமி தனது 53வது வயதில் 1992ம் ஆண்டில் காலாமாகிவிட்டார். இளையவரான ஜெயலட்சுமி உடல்நலக் குறைவால் புதன் கிழமை நள்ளிரவு 12 மணியளவில் காலமானார். முன்னதாக இவர் கடந்த 1ம் தேதியன்று வீட்டில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்திருக்கிறார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்புதான் வீடு திரும்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மையாரது உடலுக்கு உறவினர்கள், கர்நாடக பாடகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் மருத்துவமனை ஆராய்ச்சிக்காக தானம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *