சிம்பு வீட்டில் வேலை செய்தவர் இன்று அவருக்கே சம்பளம் கொடுக்கிறார்

‘என் ஆளோட செருப்பை காணோம்’ படத்தின் இயக்குநர் ஜெகன்நாத் கொடுத்த பேட்டி..

‘என் ஆளோட செருப்பை காணோம்’னு ஒரு FeelGood ரக படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ஜெகன்நாத். இப்படத்தில் ஆனந்தி மற்றும் பக்கோடா பாண்டி, யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், பாலசரவணன், சிங்கம்புலி, ரேகா, சுஜாதா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ‘புதிய கீதை, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேசிய சீதை’ என இவர் இயக்கிய மூன்று படங்களும் நல்ல பெயர் எடுத்தன. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் இயக்குநர் சீட்டில் அமர்ந்துள்ளார்.

‘என் ஆளோட செருப்பை காணோம்’ படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடியிருக்கிறாராம். சிம்பு பாடிமுடிதுவிட்டு வெளியில் வந்தபோது சிம்புவைப் பார்த்து ‘நான் யாரென்று அடையாளம் தெரிகிறதா?’ என கேட்டுள்ளார் ஜெகன்நாத். சிம்புவுக்கு ஜெகன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் பணியாற்றிய ஆளென்றுதான் தெரியும். ஆனாலும் நன்கு யோசித்துவிட்டு, ‘ரொம்ப பார்த்த முகமா இருக்கு.. ஆனா.. என்று சொன்னார். பிறகு அண்ணா.. நீங்களா… அப்போ நீங்க வேற லுக்குல இருப்பீங்க. இப்போ எனக்கே சம்பளம் கொடுக்குற அளவுக்கு வளந்துட்டிங்க. கலக்குங்க; வாழ்த்துக்கள் ப்ரதர்’ என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறாராம் சிம்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *