விதைப்பந்துகள் வீசி காடு வளர்க்கும் இளைஞர் கூட்டம்!

. தமிழகம் முழுவதும் தமிழக இளைஞர்கள் திட்டம் என்ற இயக்கத்தின் பெயரில் விதைப்பந்துகள் உற்பத்தி செய்து அவற்றின் மூலம் காடுகளை வளர்த்து வருகின்றனர்.

இயற்கையும், பசுமையும் நம்மை விட்டு வேகமாக பிரிந்துவரும் காலக்கட்டத்தில் அவற்றை வேகவேகமாக காப்பாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டனர் நமது தமிழக இளைஞர்கள். தமிழகம் முழுவதும் தமிழக இளைஞர்கள் திட்டம் என்ற இயக்கத்தின் பெயரில் விதைப்பந்துகள் உற்பத்தி செய்து அவற்றின் மூலம் காடுகளை வளர்த்து வருகின்றனர்.

மாறிப்போன பருவமும், பருவம் தப்பிய மழையும், மழை வரத்துக் குறைவும், அதனால் நிலவும் வறட்சியும், பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயமும் மீண்டும் தழைக்க ஒரே தீர்வு காடுகளை உருவாக்குவதும், இயற்கையை பேணி பாதுகாப்பதும்தான்.

vvv

தமிழக இளைஞர்கள் இயக்கத்தினர் ஊர் ஊராக சென்று மக்களிடம் விதைப்பந்துக்களை கொடுத்து மரங்களை வளர்க்கச் சொல்லி விழிப்புணர்வூட்டி வருகின்றனர்.

விதைப்பந்து என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?

5 பங்கு மண், 3 பங்கு ஆடு+மாடு சாணம், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை கலந்து மாவு போல பிசைந்து, அதை சிறு சிறு உருண்டைகள் போல உருட்டி, அதில் சிறு துளையிட்டு விதைகளை உள்ளே போட்டு மூடிவிட வேண்டும். பின்னர் அந்த உருண்டைகளை நிழலில் காயவைத்து, சிறிது காய்ந்ததும் வெயிலில் சற்று காயவைத்தால் விதைப்பந்து கிடைத்துவிடும்.

1k9a2449_10327

இந்த விதைப்பந்துகள் ஒரு வருடம் வரையிலும் கூட வறட்சியை தாக்கிப்பிடிக்கும். இவற்றை மானாவாரி நிலங்களில் வீசிஎரிந்துவிட்டால், மழை வரும்போது அந்த விதைகள் முளைத்து மரமாக வளரும்.

இவ்வகையில் வளரும் மரங்களுக்கு பராமரிப்பே தேவையில்லை. விதைப்பந்துகள் மூலம் வளரும் மரங்கள் உறுதியானவையாகவும், இயற்கை காடுகளை உருவாக்கும் வல்லமை கொண்டவையாகவும் இருக்கும்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *