சின்ன மம்மிக்கும் டாட்டா, டிடிவிக்கும் டாட்டா… இரட்டை இலைக்கு வெல்கம்!!!

தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் நிலவரத்தை விளக்கும் நையாண்டி கட்டுரை!

எப்படியாவது சி.எம். சீட்டில் உட்கார்ந்து பார்த்துடணும்னு பல ரூட்டுல முட்டுக்கொடுத்து புயல் வேகத்துல பயணம் செஞ்சாங்க சின்ன மம்மி. ஆனா அவங்க ஏறுன காரு கடைசில பெங்களூர் ஜெயில்ல போய்தான் நின்னுச்சி. அப்பவும் கூட தில்லோட ஜெயிலுக்குள்ள போனாங்க. ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி, அம்மா சமாதில மூணு தடவ ஓங்கி அடிச்சி, கையில ஒட்டியிருந்த தூசிய துடச்சி, ஒரு சபதம் எடுத்தாங்க. இந்த சசிகலா இல்லையென்றாலும் எனது அடி விழுதுகளே இந்த நாட்டை ஆளட்டும் என எடப்பாடியை உக்காரவச்சிட்டுத்தான் பெங்களூருக்கு கார் ஏறுனாங்க. அதிமுகவின் தலைமையாக டிடிவி தினகரனை போட்டு, சைடுல கொஞ்சம் ட்விஸ்ட்டு வச்சாங்க.

58216058

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தினகரன் தொப்பி போட்டுக்கிட்டு ஒட்டு கேக்கவந்தபோது, கூட்டத்துக்கு நடுல பணம் விளையாடிகிட்டு இருந்துச்சாம். இந்தியாவுலையே, ஏன் ஒலகத்துலேயே ஓட்டுக்கு பணம் கொடுக்க பேலன்ஸ் ஷீட் போட்டு டேலி பண்ணி பட்டுவாடா பண்ணுன ஒரே கும்பல் நம்ம சினனம்மா கும்பல்தான்னு வேற பேசிக்கிட்டாய்ங்க. நாலு பேருக்கு வெளிச்சமா தெரியுற அளவுக்கா பாஸ் பணத்தை நடுத்தெருவுல விளையாட வுடுறது?ன்னு அணிக்குள்ளயே தகராறு. அதை சமாளிச்சி முடிக்குறதுக்குள்ள, ஆதாரமாவே ஆன்லைன்ல ஒரு சந்துபொந்து விடாம போஸ்ட் அடிச்சி ஒ(ஓ)ட்டிட்டாங்க. எப்படியாது இலையை படரவிட்டு அதுக்குமேல தாமரைய மலர வைக்குற முயற்சியில தீவிரமா இறங்கியிருந்த பா.ஜ.க. தினகரனை தூக்குறதுக்குனே தவம் பண்ணிட்டு இருந்ததுக்கு பலன் கெடச்சிடுச்சி.

sasikala-slam_eps

loading...
loading...

தினகரனுக்கு வலை வீசுற வேகத்தைப் பாத்து, கீழ தொங்கிட்டு இருந்த விழுதுகளுக்கு டென்சன்… டென்சன்… டென்சன்… ஓவர் நைட்டுல அம்புட்டு விழுதுஸும் பொத்து போத்துக்கு விழுந்து சூசைட் பண்ணிக்கிச்சாம். இதனால் நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், எங்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால், அங்கன இருக்கும் ஓ.பி.எஸ். அணியுடன் இணைய முடிவெடுத்துள்ளோம்…..(நீங்களே வண்டுமுருகன் டயலாக்க போட்டுக்குங்க). நாம் எது செஞ்சாலும் இந்த ஒலகம் நம்மள உத்துப்பாக்கணும் என்ற கொள்கையுடன் வாழ்கிற அதிமுகவினர் போர்க்கப்பல சுத்திப்பாக்க போறோம்னு சொல்லிட்டு, அங்க டீல் பேசிட்டு வந்திருக்காங்க. கரையேறுனதும், இந்த கப்பல் தண்ணீல செம்மையா மெதக்குதுங்கன்னு பேட்டி வேற.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *