சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் இருந்து திவ்யா விலகியதன் பின்னணி!

சமையல் மந்திரம் நிகழ்ச்சியின் மூலம் ஆண்களே சொல்ல கூச்சப்படும் பல விஷயங்களை மிக தைரியமாக ஆலோசனைக்கு உட்படுத்தி பாலியல் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வழிவகுத்தவர் திவ்யா.

நிகழ்ச்சிக்கு ஏற்ப நடை-உடை-பாவனைகளை வெளிப்படுத்தி மிகத் திறமையாக தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த திவ்யா திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி, வம்சம், மரகத வீணை சீரியல்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

சமையல் மந்திரத்தில் இருந்து வெளியேறியதற்கு பரபரப்பாக எந்தவொரு காரணமும் இல்லையென்றாலும் ஆஹா போட வைக்கும் அளவிற்கு சுவாரசிய காரணத்தை கூறியுள்ளார் திவ்யா.

14203173_1824576387765725_5785690174698206199_n

இது பற்றி திவ்யா கூறியதாவது:
“நாம் வாழ்க்கையில வளரனும்னா ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்கக் கூடாது. சவாலாவே இருந்தாலும் வித்தியாசமான சவாலா இருக்கணும். அப்படி இருந்தாதான் வாழ்க்கை சுவாரசியமா இருக்கும். நமக்கான தளங்கள் நாடு முழுசும் காத்திருக்கும்போது நாம ஏன் ஒரே இடத்துல இருக்கணும்? அதனால்தான் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகினேன். அந்த ஒரு நிகழ்ச்சிய விட்டுதான் விலகினேனே தவிர மொத்த மீடியா அப்டேட்டும் ஃபிங்கர் டிப்ல வச்சிருக்கேன். வெள்ளித்திரை உள்பட. இப்போ ‘குலேபகாவலி’ படத்துல மொட்டை ராஜேந்திரன் சாருக்கு மனைவி கதாபாத்திரத்துல நடிக்கிறேன். திரைத்துறையில கால் பதிக்காம விடமாட்டா இந்த திவ்யா” என்கிறார்.

இந்த திவ்யா முதலில் அறிமுகமானது வெள்ளித்திரையில்தான். சின்ன சின்ன காட்சிகளில் நடித்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ‘மன்னாரு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவரது நடிப்பை பார்த்து பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கிடைக்கும் இடைவெளியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வளம் வந்தார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான ‘சமையல் மந்திரம்’ இவரது பெயருடனே ஒட்டிகொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *