ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தும் அளவுக்கு, அதாவது பார்ப்பவர்கள் மயங்கிவிழும் அளவிற்கு அழகாக இருப்பார்கள். நடுத்தர உயரம் கொண்டிருந்தாலும் கம்பீரமான தோற்றத்தையும், நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், விருந்த தோள்பட்டையுமாக காட்சியளிப்பார்கள். இவர்களின் கண்களுக்கு தனி அழகுண்டு. வரிசையான பற்கள், குட்டையான விரிந்த மூக்கு, அடர்ந்த முடியும் இருக்கும் என ஜோதிடர்களால் வர்ணிக்கப்படுகிறார்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட ஆயுள், புகழ், கெளரவம், அந்தஸ்து யாவையும் அமையுமாம். சட்சாத் சரஸ்வதி இவர்களது நாக்கில் தாண்டவம் ஆடுவாளாம். அதாவது சாமர்த்தியமாகவும், சாதுரியமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றல் கொண்டிருப்பார்களாம். என்னதான் வாய் நிறைய பேசினாலும், புதிய நண்பர்களிடமோ அல்லது பழகுபவரிடமோ அவ்வளவு எளிதில் நெருங்கமாட்டார்கள். எதிரிகளிடம் பேசும்போது குதர்க்கமாகவும் பரிகாசமாகவும் பேசி அவர்களை மரணபங்கம் படுத்துவதில் ஜென் லெவலில் இருப்பார்கள்.
தாறுமாறாக கலாய்க்கும் அளவுக்கு பேசினாலும், பிறரால் தன் வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடிக்கமுடியாதவாறு சூசகமாக வார்த்தைகளை கையாளுவார்களாம். தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப் படாத நல்ல உள்ளங்களான இவர்கள் எங்கேயும் எப்போதும் உணர்ச்சிவசப்படமாட்டர்கள். சிறந்த எமோஷனல் இண்டலிஜன்ஸ் இவர்கள்தான்.
தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டவர்களாக இருப்பார். தன்னுடன் யார் வம்புக்கு வாழ் சுத்தினாலும் துணிச்சலோடு அவர்களுடன் மல்லுக்கட்டி, தோற்கடித்து ஓட ஓட விரட்டும் வல்லவர்களாக இருப்பார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி நூற்றுக்கு நூறு சதவீதம் இவர்களுக்கே பொருந்தும். எதற்கும், யாருக்கும் எதையும் எளிதாக விட்டுக்கொடுக்கவே மாட்டார்களாம்.