உலகின் உண்மையான சூப்பர்மேன்கள் இவர்கள்தான்… தெரிந்துகொள்ளுங்கள்!!!

உண்மையான சூப்பர் மேன்கள் நம்முடன் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இக்கட்டுரை.

VFX எஃபெக்ட்டில் பறக்கும் ஸ்பைடர் மேன், பேண்ட்க்கு மேல் பட்டாப்பட்டி போட்டுக்கொண்டு பறக்கும் சூப்பர் மேன், அதே பட்டாபட்டியை கருப்பு நிறத்தில் போட்டிருக்கும் பேட் மேன், ஐயர்ன் மேன் என ஹாலிவுட் நமக்கு போலியான மேன்களை மட்டுமே காட்டி ஏமாற்றியிருக்கிறது மக்களே. உண்மையான சூப்பர் மேன்கள் நம்முடன் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இக்கட்டுரை. இதில் எழுதப்பட்டுள்ள 5 பேரின் சூப்பர் பவர்களை நிச்சயமாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

maxresdefaultமின்னல் மனிதர் – டோனி சிகோரியா:
தனது 42வது வயதில் மின்னல் தாக்கியதால் இறந்து, மீண்டும் உயிருடன் எழுந்து வந்தவர்தான் இந்த டோனி. இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்து ஒரு சில மாதங்களில் பியானோ மீது பிரியம் ஏற்பட்டது. திடீரென்று ஒரு பியானோவை வாங்கி, சில நாட்களுள் அவரே கற்றுக்கொண்டு மிக அழகாக, அச்சு பிசராமல் இசையை வாசிக்கத் தொடங்கிவிட்டார். டோனி ஒன்றும் இசைக்கலைஞர் கிடையாது. அவர் விபத்துக்கு முன் பியானோவை தொட்டது கூட இல்லை என்பது ஆச்சரியம்தான்.

ylzy0pxt9ts9e0vkrd8kகாந்த மனிதர் – நிக்கோலி
மின்சாரவியல் குறித்து ப்ராக்ட்டிக்களாக தெரிந்துகொள்ள நிக்கோலி மின் கம்பத்தில் ஏறி, மின்விளக்கை ஆய்வு செய்தார். தவறான மின்கம்பியை தெரியாமல் தொட்டுவிட, இவர் மீது மின்சாரம் தாக்கியது. அவ்வளவாக காயம் ஏதும் இல்லை என்பதால் சிறு சிகிச்சை மட்டும் எடுத்துக்கொண்டார். அடுத்தநாள் காலை நிக்கோலி தனது அறையிலிருந்து வெளியே வந்தபோது வீட்டிற்குள் இருந்த எல்லா இரும்புப் பொருட்களும் அவர் மீது பறந்துபோய் ஒட்டிக்கொண்டது. அன்றிலிருந்து காந்த மனிதர் ஆனார் நிக்கோலி.

ums1599pnjkizr5oaz0eசூப்பர் விஷன் மனிதர் – பென் அண்டர்வுட்
புற்றுநோய் காரணமாக குழந்தைப் பருவத்திலேயே முழுவதுமாக கண் பார்வை இழந்தவர் பென் அண்டர்வுட். ஆனால் அதிவேகமாக பைக் ஓட்டுகிறார். ஃபுட்பால் விளையாடுகிறார். நீச்சல் அடிக்கிறார். கார் ஓட்டுகிறார். பிரம்மிப்பாக இருக்கிறது அல்லவா? ஆம், இவர் ஒவ்வொரு பொருட்களிடமிருந்து வரும் அலைக்கற்றைகளை உணர்ந்து அது என்ன பொருள்? அதை அப்படி கையாள வேண்டுமென்பதை துல்லியமாக புரிந்துகொள்கிறார். அதி நவீன சென்சார் கருவிகளைப் போல வேகமாக செயல்படுகிறார்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *