அரசியலிலும் ‘என் வழி தனி வழிதான்’ – ரஜினி கர்ஜனை!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?… சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஆதரித்த ஒரு கூட்டணிக்கு மக்கள் கொத்து கொத்தாக ஒட்டு போட்டு வெற்றி பெறச் செய்ததிலிருந்து….

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?…
சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஆதரித்த ஒரு கூட்டணிக்கு மக்கள் கொத்து கொத்தாக ஒட்டு போட்டு வெற்றி பெறச் செய்ததிலிருந்து இன்று வரை பெரும்பாலானோரிடமும் உள்ள கேள்வி இதுதான். ரஜினியை சந்தித்து பேட்டி எடுக்கும் ஒவ்வொறு ஊடகவியலாளரின் கேள்வியும் இதுவாகத்தான் இருக்கிறது. இந்த கேள்விகளுக்கு ரஜினி கொடுக்கும் பதிலெல்லாம் ஒரு இன்ச் ஸ்மைல் மட்டும்தான். அரசியல் பிரவேசம் பற்றி வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அவர் எங்கும் எப்போதும் காட்டிக்கொண்டதில்லை. இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அரசியல் குறித்து விரிவாக பேசினார்.

c_2gvrru0aahmwh

அவர் பேசியதாவது:
” தமிழக மக்கள் சில விஷயங்களில் ஏமாந்துவிடுகிறார்கள். அது என்ன என்பதை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. 21 ஆண்டுகளுக்கு முன் நான் ஆதரித்த கூட்டணியை மக்கள் ஜெயிக்க வைத்தார்கள். ஆனால் அப்போது நான் கூறிய அரசியல் கருத்து ஒரு விபத்தாக கருதுகிறேன். படம் ஓட்டுவதற்காக அரசியல் மாயை காட்டுவதாக சிலர் கூறினர். அதே சமயத்தில் என்னை சில அரசியல்வாதிகள் பயன்படுத்தியும்கொண்டனர். அவர்களில் பலரும் என்னை வைத்து பணம் சம்பாதித்தனர். சிலர் கடிதம் அனுப்பினார்கள். எம்.பி., எம்.எல்.ஏ. ஆக விரும்புவது தவறில்லை; ஆனால் அதை வைத்து பணம் பார்க்க நினைப்பவர்களை என்ன சொல்வது?

என் வாழ்க்கை ஆண்டவன் கையில் உள்ளது. அவர் கொடுத்த நடிப்புத் தொழிலைதான் நடத்தி வருகிறேன். அடுத்து அவர் என்ன கொடுத்தாலும் அதை ஏற்று செய்வேன். ஒருவேளை நான் அரசியல்வாதியாக வந்தாலும், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன்.

எனது ஆதரவு இருக்கிறது என கூறிக்கொண்டு ஓட்டு வாங்கவரும் எவரையும் நம்ப வேண்டாம் என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.”

இவ்வாறான உரைக்குப் பின்பும், ‘அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?’ என்ற கேள்வியை நீடிக்க விடுகிறார் ரஜினிகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *