அரசியல் பேசும் ரஜினியை ஏன் விமர்சிக்கிறார்கள்?

அண்மையில் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ரஜினியின் ஒரே பதில், நோ பாலிடிக்ஸ் ப்ளிஸ்…

அண்மையில் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ரஜினியின் ஒரே பதில், நோ பாலிடிக்ஸ் ப்ளிஸ்..
ஆனால் இவர்மட்டும் இவருக்கு தேவைப்படும்போது அரசியல் பேசுவார். அதை எல்லோரும் கேட்டுக்கொள்ள வேண்டும். போகட்டும், அந்த காமெடிய விட்டுத்தள்ளுவோம்..
குடிமகன் என்ற முறையில் சாதி, மதம், இனம், தொழில் என எந்த பாகுபாடுமின்றி யாவரும் அரசியலில் நுழையலாம். அதனால் ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம். அவரை தடுக்க யாருக்கும் உரிமையில்லை.

rajinikanth_th_2714225g

அப்புறம், தமிழ்நாட்டுக்கு ரஜினி என்ன செய்தார் என்று கேட்பதெல்லாம் அர்த்தமற்ற ஒன்று. அவர் ஒரு நடிகர். அவர் தொழிலை அவர் பார்க்கிறார். அப்படி பார்த்ததால் தமிழ்நாட்டில் பெரும் அளவில் வியாபார ரீதியாக சம்பாதிப்பவர்கள் தமிழ்நாட்டு என்ன செய்தார்கள் என்றா கேட்டுக்கொண்டிருக்கிறோம்?

ஒருவர் அரசியலுக்கு வருவதற்குமுன் எதையாவது செய்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. பெரும்பாலானோர் திடீரென அரசியலில் நுழைந்து அதன் பிறகே தேசப்பணியை முழுவீச்சில் மேற்கொண்டவர்கள்தான். ரஜினியை பொறுத்தவரை பிரச்சினை என்னவென்றால், திடீர் திடீரென சைடு கேப்பில் அரசியல் பேசிவிட்டு அப்படியே ஓடிவிடுவது. விளையாடட்டும்.. விளையாடட்டும்… அவரை லைம் லைட்டில் வைத்திருக்க தவிர்க்க முடியாத சூழ்நிலை என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

ஒன்று, ”அரசியலுக்கு வந்தே தீருவேன் என்று சொல்லவேண்டும். இல்லையென்றால் எக்காலத்திலும் அரசியலுக்கு வரவேமாட்டேன்; அரசியலுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என பொட்டில் அறைந்தாற்போல சொல்லவேண்டும். அப்படியும் சொல்லமாட்டேன் என்கிறார்.

நான் அரசியலுக்கு வருவேனே மாட்டேனா என்பது நாளை ஆண்டவன் போடும் உத்தரவில்தான் இருக்கிறது என்று சொல்கிறார். இதையேதான் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தேய்ந்த ரிக்கார்ட்போல் சொல்லிவருகிறார். குறிப்பாக அவரின் புதுப்படத்தின் பஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் போன்றவை வருவதற்கு முன்பே இந்த தேய்ந்த ரெக்கார்டு வந்து ஓட ஆரம்பித்துவிடுகிறது. ஒரு வேளை ஆண்டவன் வந்து கடைசிவரை சொல்லவே மாட்டான் என்பதில் அதிகமாக நம்பிக்கை கொண்டவராக இருப்பார் போல.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *