சென்னையில் இரவு நேர பைக் ரேஸ்… இளைஞர் பலி!

சென்னை சாலைகளில் இரவு நேரத்தில் சட்டத்தை மீறி பைக் ரேஸ் நடைபெறுவதும், அதில் இளைஞர்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது.

சென்னை சாலைகளில் இரவு நேரத்தில் தடையை மீறி பைக் ரேஸ் நடைபெறுவதும், அதில் இளைஞர்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. நேற்று நடத்தபட்ட பைக் ரேஸில் இளைஞர் ஒருவர் பலியாகியிருக்கிறார். இது போல ஒன்றல்ல இரண்டல்ல கடந்த 5 வருடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் ரேஸ் விபத்துகளில் பலியாகியிருக்கின்றனர். சாலையில் செல்லும் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் பலியாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை விபத்து நடக்கும்போது மட்டும் பேசிவிட்டு அப்படியே கடந்து போக வேண்டிய விடயம் அல்ல இது.

10291782_1550370605190653_7003020065546584735_n

நேற்றிரவு வழக்கம் போல மெரீனா பீச் சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் நடத்தியுள்ளனர். மோட்டார் கைக்கில்களின் சப்தங்களால் பீச் ரோடு தனது இயல்புநிலையை இழந்தது. வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். நடைபாதையில் சென்ற பெண்களும், குழந்தைகளும் கூச்சலிட்டனர்.

ராயபுரத்தை சேர்ந்த நிஜாம் அலி மற்றும் இர்ஃபான் இருவரும் ஒரே பைக்கில் சென்று பந்தயத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. ரேஸில் பயங்கர சப்தத்துடன் சீறிப்பாய்ந்த இவர்களின் பைக் நிலை தடுமாறி எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதி பின்வாங்கி பறந்துள்ளது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டிச்சென்ற நிஜாம் அலி பரிதாபமாக உயிரிழந்தார். இரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இர்ஃபான் உள்ளிட்ட 2 பேர் படுகாயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். CCTV காமிராக்கள் பொருத்தியுள்ளனர். மேலும் தடுப்புகளையும் அங்கே நிறுத்தியுள்ளனர். இதனை மீறியும் அந்த பகுதியில் ரேஸ் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றது.

11986502_1179534932062073_1873012278915545523_n

இரவு நேரத்தில் மெரீனா முதல் அடையாறு வழியாக பெசன்ட் நகர் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பைக் ரேஸ் இளைஞர்களால் பெரும் அவதிக்கு உள்ளாவதாக நெடுநாட்களாக புகார் உள்ளது. எப்போது? எங்கிருந்து சீரிப்பாய்வார்கள்? யார் மீது மோதுவார்கள்? என்று கூட தெரியாத நிலைதான் அங்கே நிலவுகிறது.

இத்தகைய அச்சம் பீடித்த சாலையில் இயல்பான போக்குவரத்து சூழல் ஏற்படவேண்டுமென்றால் போலீசார் இரவு நேரங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது சென்னைவாசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *