நயன்தாரா பட டைட்டிலில் ‘இலுமினாட்டி’ குறியீடா?

தேவசேனா எந்த நாட்டை ஆண்டாலும் எனக்கொன்றும் கவலை இல்லை என அதிரடியாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

தேவசேனா எந்த நாட்டை ஆண்டாலும் எனக்கொன்றும் கவலை இல்லை என அதிரடியாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்த வருடம் மட்டும் ‘டோரா’, ‘அறம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’ என நான்கு படங்களில் கலக்கித் தள்ளியிருக்கிறார். முதலாவதாக ரிலீஸ் ஆன ‘டோரா’வின் கதை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையென்றாலும், இரண்டு மூன்று சமூக அக்கறை துண்டுகளைத் தூவி சரிசெய்துவிட்டார்கள். நயனை ரசிக்க மட்டுமே தியேட்டரில் கூட்டம் கூடியது. ஆனால் அறம் உள்ளிட்ட மற்ற 3 படங்கள் பேசும்படியான கதாபாத்திரங்களை சுமந்து வரும் என்றுதான் தெரிகிறது. டைட்டிலின் டிசைன் அந்த மாதிரி. இந்த நான்கு படங்களும் நயனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதுப்புது சப்ஜெக்ட்தான்.

18519483_1596812137059585_2588724662050802938_n-copy

சமீபத்தில் வெளியான இவரது ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் Firstlook Poster-ஐ கூர்ந்து கவனிக்கும்போது ஒரு விஷயம் தெரியவந்தது. டைட்டிலின் டிசைனில் இமைக்கா நொடிகள் என்ற எழுத்துக்களுக்கு மத்தியில் கண் போன்ற அமைப்பு உள்ளது. ‘இலுமினாட்டி’ எனப்படும் யாராலும் அறியப்படாத அமைப்பின் சின்னம்தான் இந்த கண் என்று விஷயம் அறிந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

டிமாண்டி காலனி படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கம் இந்த த்ரில் படத்தில் நயன்தாரா, அதர்வாவிற்கு அக்காவாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நயன் 4 வயது குழந்தைக்கும் தாயாக நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *