நயனுக்கு A, நிக்கிக்கு B… இது என்னனு தெரியுமா?

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். எந்த தேவசேனா படையெடுத்து வந்தாலும் தமிழில் ஆள் டைம் ஃபேவரட் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். வயது அதிகரிக்க அதிகரிக்க நயனின் அழகும் இளமையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறதே என ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

ffd269196ce9f139d0027a96ed527768

தமிழில் தற்போதுதான் அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார் நிக்கி கல்ராணி. சமீபத்தில் வெளியான மரகத நாணயம் திரைப்படத்தில் இவரது நடிப்பும், கதாபாத்திரமும் பேசப்பட்டுள்ளது. 30 நொடிகளை தவிர மீதமுள்ள மொத்த படத்திலும் ஆண் கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறார். இவருக்கு டப்பிங்கும் ஆண் குரலில் செய்யப்பட்டது. எந்த நடிகையும் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை மிக தைரியமாக ஏற்று நடித்திருக்கிறார் நிக்கி.

18-1429298358-skinshowisnotglamournikkigalrani

தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்திருப்பதால், தற்போது சென்னையிலேயே ஒரு அப்பார்ட்மென்ட் வீடு வாங்கி தங்கியிருக்கிறார். இவர் தங்கியிருக்கும் அதே அப்பார்ட்மென்ட்டில் தான் நயன்தாராவும் தங்கியிருக்கிறார். நயன் A தளத்திலும், நிக்கி B தளத்திலும் தங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *