மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி முஸ்தபா மரணம்

1993ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவரான முஸ்தபா டோசா இன்று மாரடைப்பால் மரணித்தார்.

 

1993ம் ஆmustafa-dossa-28-1498625560-28-1498645888ண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவரான முஸ்தபா டோசா இன்று மாரடைப்பால் மரணித்தார்.

நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ராஹீம், டைகர் மேமன் உள்ளிட்டோரின் கூட்டுச்சதியினால் நிகழ்த்தப்பட்ட அந்த குண்டுவெடிப்பில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். தாதாக்களுக்கு உதவிய முக்கிய நபர்தான் இந்த முஸ்தபா டோசா. தாக்குதல் நடந்து 10 வருடங்களுக்குப் பிறகு 2003ம் ஆண்டுதான் முஸ்தபா கைது செய்யப்பட்டு, தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.

 

வழக்கு பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம்தான் மும்பை சிறப்பு நீதிமன்றம் இவரை குற்றவாளி என ஆதார நிரூபணங்களுடன் அறிவித்தது. நேற்றுதான் முஸ்தபாவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும் என சி.பி.ஐ. துறை சிறப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த நிலையில் இன்று அவர் மாரடைப்பால் மரணித்துள்ளார்.

முன்னதாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு மும்பை ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. சட்ட விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளுக்குப் பின் முஸ்தபாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *