‘தில்’லோட ‘ட்யூ’ போடுபவர்களின் கவனத்திற்கு…

“தில் இருந்தா ட்யூ போடு” சவாலை ஏற்று அடிக்கடி ட்யூ போடும் ட்யூட்ஸ்க்கு என்னென்ன ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.

தாகம் தீர்க்கும் நிறுவனம் என தன்னை வரையறுத்துக்கொண்ட ‘பெப்சி கோ’ நிறுவனத்தின் பெப்சி, கோக், நிம்பு பாணி போன்ற குளிர்பானங்களின் வரிசையில் மவுண்டைன் ட்யூ என்ற சோடா பானமும் ஒன்று. பெப்சி, கோக் பானங்கள் எத்தகைய கெடுதல்களை கொடுக்கக் கூடியதோ அதுக்கும் மேல் என சொல்லவைக்கும் விதமாக அபார பாதிப்புகளை கொடுக்கிறது இந்த ‘ட்யூ’ பானம்.

maxresdefault
பிசினஸ் போட்டிக்காக உலகம் முழுவதும் ஃபாஸ்ட் ஃபுட் பிராண்டுகளை ஆரம்பித்து, அங்கு சாப்பிடுகையில் தாகம் எடுக்கும்போது பெப்சி, கோக் பானங்களை கொடுத்து, மீண்டும் தாகம் எடுக்க குர்குரே, லேஸ், சீட்டோஸ் நொறுக்குத் தீனிகளையும் இந்த நிறுவனமே நமக்கு கொடுக்கிறது. இவர்களது வணிக உத்தி நம்மை எப்படி ஆக்கிரமித்துள்ளது என்று பாருங்களேன். அதிலும் குளிர்பானங்களை தயாரிக்க நம்முடைய தாமிரபரணி ஆற்றிலிருந்தே தினமும் லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறார்கள். மவுண்டைன் ட்யூ விளம்பரத்தில், மூன்று இளைஞர்கள் ஒரு மழை உச்சியில் குதித்து, பாராசூட் மூலம் கீழே இறங்கி, “தில் இருந்தா ட்யூ போடு” என நம்மிடம் சவால் விடுவார்கள். இந்த சவாலை ஏற்று அடிக்கடி ட்யூ போடும் ட்யூட்ஸ்க்கு என்னென்ன ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.

151105-spot-andy-player-540x380_articleimg-5
1930ம் ஆண்டில் ஹார்த்மென் பிரதர்ஸ் தங்களது விஸ்கி மதுபானங்களுடன் கலந்து குடிப்பதற்கென ப்ரித்யேகமான ஒரு நீர்ம கலவையை தயாரித்தனர். அந்த நீர்மக் கலவை லித்திய தன்மையூட்டப்பட்ட எலுமிச்சை சாறு கலந்ததாக இருந்தது. இந்த நீர்ம கலவை விஸ்கியுடன் இணைத்து பருகிதுவதற்காக மட்டும் பயன்படுவதில்லை. ஹார்த்மென் சகோதரர்கள் வழக்கமாக டான்ஸி மலைக்குன்றுகளில் நிலவொளி(Moonshine) படும் இடத்தில் அமர்ந்து இந்த நீர்ம கலவையை பருகிடும் பழக்கம் கொண்டவர்கள்.

maxresdefault-1

இந்த நீர்மத்தை குடித்ததும், உடலுக்குள் உடனடி சுறுசுறுப்பு கிடைப்பதை உணர்ந்த அவர்கள், பின்னரே இதை விஸ்கியுடன் கலந்து பிராண்டட் என்ற போர்வையில் விற்கத் தொடங்கினர்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *