சீனா ஏரியில் பிரமாண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம்… திருந்துமா இந்திய அரசு?

நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை உபயோகித்து மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுவதால் கரிப்புகை வெளியாகி புவி வெப்பமடைகிறது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க பல்வேறு நாடுகளும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக மரபுசாரா வளங்களான காற்றாலை, சூரிய ஆற்றல், நீர்மின் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. தற்போது சீனாவும் மரபுசாரா ஆற்றல் உற்பத்தில் களமிறங்கியிருக்கிறது.

4_5

சீனாவின் அனுய் மாகாணத்தில் உள்ள ஹுவாய்நான் நகரத்து ஏரியில் மிகப்பெரிய சூரிய மின் ஆற்றல் உற்பத்தி நிலையத்தை கட்டமைத்துள்ளது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்து ஆலை செயல்படுவதற்கு தயாராகவும் இருக்கிறது.

2_5

இதன் மொத்த பரப்பளவு மொத்தம் 8 லட்சம் சதுர மீட்டர் ஆகும். உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் இதுவே. இதன் மூலம் 40 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை 15 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க முடியும்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *