குல்பூஷன் ஜாதவ் தலை தப்புமா? இன்று மாலை 3.30க்கு தீர்ப்பு!

பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை பெற்றுள்ள குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

லுசிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை பெற்றுள்ள குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த ஜாதவ் இந்திய கப்பல் படையின் முன்னாள் அதிகாரி ஆவார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. அவரை மீட்பதற்காக சர்வதேச நீதிமன்றம் வரை சென்று போராடியது. இந்திய தூதரகம் மூலம் அணுகவும் முடியவில்லை. தூதரகத்தின் உதவிகள் யாவும் ஜாதவை அணுகமுடியாதவாறு பாகிஸ்தான் பார்த்துக்கொண்டது.

32aeb68000000578-3516368-image-a-1_1459383863726

நெதர்லந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடும் வாதங்களை முன்வைத்திருந்தது. “குல்பூஷன் ஜாதவ் ஒரு முன்னாள் கப்பல்படை அதிகாரிதான். ஆனால் அவரை இந்திய அரசு உளவாளியாக நிர்ணயித்து எங்கும் அனுப்பவில்லை. இவ்வழக்கு பாகிஸ்தானால் ஜோடிக்கப்பட்ட வழக்கு. இந்தியா மீதான தனது கோப உமிழ்வுகளை இவ்வழக்கின் மூலம் தீர்த்துக்கொள்ள முனைகிறது. இவ்வழக்கின் விசாரணைகள் யாவும் கேலிக்கூத்தாக தெரிகின்றன” என்று இந்தியா வாதிட்டுள்ளது.

international-court-justice-hague-netherlands

பாகிஸ்தான் தனது வாதங்களை முன்வைத்தபோது, இந்தியாவிற்கு ஈடுகொடுத்து கடுமையாக போராடியது. குல்பூஷன் ஜாதவ்வை காப்பாற்ற இந்தியா துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முறையீடுகள், மனுக்கள் எல்லாம் தேவையற்றவை. ஜாதவ் குற்றவாளி என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுவிட்டன. இந்தியா இந்த சர்வதேச நீதிமன்றத்தை அரசியல் திரையரங்கமாக மாற்றிக் கொண்டிருகிறது. ஜாதவ் மீதான குற்றச்சாடுகளுக்கு இந்தியா எந்த பதிலையும் கூறவில்லை.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *