தமிழர்களை பிச்சைக்காரர்கள் என திட்டிய தன்யா தமிழில் நடிக்கிறார்!

 

தமிழர்களை பிச்சைக்காரர்கள் என டிவிட்டரில் நாகரீகமின்றி திட்டிய கன்னட மற்றும் தமிழ் நடிகையான தன்யா தற்போது ஒரு தமிழ் வெப்-சீரியலில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐ.பி.எல். அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இந்த நடிகை தமிழர்களை பிச்சைக்காரர்கள் என கடுமையாக திட்டியிருந்தார்.

dhanya-balakrishna-new-stills-01

அவர் போட்ட ட்வீட்: தமிழர்கள் பிச்சைக்காரர்கள். தண்ணீருக்கு பிச்சை எடுக்கிறீர்கள். மின்சாரத்திற்கு பிச்சை எடுக்கிறீர்கள். எங்களது அழகான பெங்களூர் சிட்டியை ஆக்கிரமித்து கொச்சை படுத்தியுள்ளீர்கள். போனால் போகட்டும் என பொறுத்துக்கொண்டோம். ஆனால் இப்போது கிரிக்கெட் போட்டியிலும் நாங்கள் நினைத்தால்தான் இறுதிச்சுற்றுக்கு போக முடியும். உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா டா? என பதிவிட்டிருந்தார்.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர்வாசிகள் அவரை பயங்கரமாக வறுத்தெடுத்துவிட்டனர். இதனால் தமிழில் கமிட் ஆகியிருந்த படங்களிலிருந்து விலகிக்கொண்டார். இனி தமிழ்நாட்டு பக்கம் வரவே மாட்டேன் என்றும் சபதம் எடுத்தார். ஆனால் இப்போது அவர் துளியும் கூட வெட்கமே இல்லாமல் “As I’m Suffering frim Kadhal” என்ற இணையத் தொடரில் வாயை அடைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.

 

loading...
loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *