பிச்சை எடுத்த ‘காதல்’ பட நடிகர் பாபுவை மீட்ட தீனா, மோகன்!

கோவிலில் பிச்சை எடுத்து வந்த ‘காதல்’ பட நடிகர் பாபு என்ற குறுவேட நடிகர் சக நடிகர் தீனா மற்றும் இயக்குநர் மோகனால் மீட்கப்பட்டுள்ளார்.

கோவிலில் பிச்சை எடுத்து வந்த ‘காதல்’ பட நடிகர் பாபு என்ற குறுவேட நடிகர் சக நடிகர் தீனா மற்றும் இயக்குநர் மோகனால் மீட்கப்பட்டுள்ளார்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதல்’. இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

இப்படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் பல்லு பாபு என்ற குறு வேட நடிகர் நடித்திருந்தார். “நடிச்சா ஹீரோதான் சார், அப்புறம் அரசியல், சி.எம்., பி.எம். என்று இவர் பேசிய சீரியஸ் காமெடி வசனம் மிகவும் பிரபலம்.

02-1499001508-kadhalmoviefameactor-babu-23-1498190966

காதல் படத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வறுமையான குடும்பம் என்பதால் செலவுக்கு பணம் இல்லாமல் கோடம்பாக்கத்தில் கஷ்டப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோரும் இறந்துள்ளனர். வறுமை மற்றும் தனிமை காரணமாக கவலையில் ஆழ்ந்த பாபு, தற்போது சென்னை சூளைமேட்டில் உள்ள கோயில் ஒன்றில் பிச்சை எடுத்து வந்தார்.

02-1499001650-babu

வில்லன் மற்றும் அடியாள் வேடங்களில் நடிக்கும் நடிகர் தீனாவும், இயக்குநர் மோகனும் செய்தியை பார்த்துவிட்டு சூளைமேட்டில் உள்ள கோவில்களில் ஒன்றுவிடாமல் தேடி, இறுதியாக பாபுவை மீட்டுள்ளார். இனி பாபுவை தீனாதான் பார்த்துக்கொள்ளப் போகிறார். தீனாவும் மோகனும் இணைந்து பாபுவுக்கு சில வாய்ப்புகள் கொடுத்து உதவி செய்யப்போகிறார்களாம். இதை வீடியோ மூலம் இயக்குநர் மோகன் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *