டொனால்ட் ட்ரம்பின் அழகு மகள் டிஃபானி பற்றிய சுவாரசிய தகவல்கள்!

டொனால்ட் ட்ரம்புக்கும் அவரது இரண்டாவது மனைவி மர்லா மேப்லஸுக்கும் பிறந்தவர் டிஃபானி ட்ரம்ப். 23 வயதுதான். இப்போதே இவர் நடிகையாகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும்…..

டொனால்ட் ட்ரம்புக்கும் அவரது இரண்டாவது மனைவி மர்லா மேப்லஸுக்கும் பிறந்தவர் டிஃபானி ட்ரம்ப். 23 வயதுதான். இப்போதே இவர் நடிகையாகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும், கவர்ச்சிப் புயலாகவும், ஆடம்பர அழகியாகவும் ஜொலி ஜொலித்துக்கொண்டிருக்கிறார் டிஃபானி. அப்பா டொனால்ட் ட்ரம்ப் மீது அதீத பாசமும், மிகுந்த மரியாதையும் கொண்ட இவர், அப்பாவுடன் இணைந்து அரசியலிலும் ஆர்வமாக ஈடுபடுகிறார். குடியரசுக்கட்சியின் மாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் திறமையான முறையில் பேச்சாற்றலை வெளிப்படுத்திய இவர், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டப் பின் அமைதியாகவே இருந்தார். தேர்தல் பிரச்சாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். அப்போது அதிகம் தென்படவில்லை. இந்த கட்டுரையில் இவரைப் பற்றிய பல சுவாரசிய தகவல்களை பார்க்க போகிறோம் வாசகர்களே…

அப்பா செல்லம்:
donald-trump-tiffany-trump-2441fa06-8797-40b2-80d9-6b2b253ff34c
முன்னுரையில் சொன்னதைப் போல டிஃபானி அப்பாவின் சமத்து செல்லம். எந்த மேடையிலும், எந்த டிவி ஷோக்களிலும் தன்னுடைய அப்பாவைப் பற்றி பேசாமல் கீழே இறங்கமாட்டார். குடியரசுக் கட்சியின் மாநாட்டில் ‘என் அப்பா இயற்கையிலேயே உற்சாகமூட்டுபவர்’ என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை மக்களிடம் கைத்தட்டலை பெற்றது. தன் மகளின் பாசத்தையும், பேச்சாற்றலையும் கண்டு டொனால்ட் டிராப் அந்தே மேடையிலேயே பாராட்டுக்களை தெரிவித்தார்.

சட்டப்படிப்பில் ஆர்வம்:
1468980786-1468980257-gettyimages-577715546
அப்பாவின் தொழில் மற்றும் அரசியல் தத்துவங்கள் மற்றும் அதன் வழிகளை பின்பற்ற விரும்புவதில்லை டிஃபானி ட்ரம்ப். ‘என் வழி தனி வழி’ என்ற கோட்பாட்டை கொண்டிருக்கும், இவர் சட்டத்துறையின் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தலைசிறந்த ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் சட்டப்படிப்பையும் தொடங்கியிருக்கிறார். மாடலிங், தொலைக்காட்சி, அரசியலில் கலக்கும் இவர் கூடிய விரைவில் சட்டத்திலும் கலக்குவார் என அமெரிக்க மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்கின்றனர்.

இன்ஸ்டாகிரம் ராணி:
16123961_216146685514362_5169915704006148096_n
சமூக ஊடங்களில் பொறுத்தவரை டிஃபானி ஆக்டிவாக இருக்கும் தளம் இன்ஸ்டாகிரம்தான். ஒவ்வொரு நாளும் அதில் தனது நகர்வுகளை புகைப்படங்களாக பதிவு செய்வது என்பது இவருக்கு மிகவும் பிடிக்குமாம். கவர்ச்சி புகைப்படங்கள் என்றாலும், தன் காதலனுடனான புகைப்படம் என்றாலும் டன் கணக்கில் லைக்குகளும் கமெண்ட்களும் கொட்டுகின்றன.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *