தேர்தல் கமிஷனையே சுத்தலில் விட்ட என்ஜினீயர்!

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் தேர்தல்கள் ஓட்டுச்சீட்டு முறையிலேயே நடத்தபட்டு வந்தன. பின்பு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தன.

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் தேர்தல்கள் ஓட்டுச்சீட்டு முறையிலேயே நடத்தபட்டு வந்தன. பின்பு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தன. ஒட்டுச்சீட்டு நடைமுறையில் இருந்த சிக்கல்கள், கால விரயம், செலவுகளை குறைக்கும் விதமாக வாக்குப்பதிவு மையங்களில் இயந்திரங்களை கொணர்ந்தது இந்திய தேர்தல் ஆணையம். மத்திய அரசின் நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனமும், இந்திய மின்னணு கழகமும் இணைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கின்றன.

evm-to-have-candidates-photo

  • வாக்குப்பதிவு இயந்திரத்தில், கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுப்பதிவு கருவி என இரண்டு பகுதிகள் அமைந்திருக்கும். கட்டுப்பாட்டு கருவியானது மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு கருவியானது வாக்காளர் ஓட்டளிக்கும் மறைவான இடத்திலும் வைக்கப்பட்டிருக்கும்.
  • இந்த இரண்டு கருவிகளும் பத்து மீட்டர் நீளமுள்ள மின் இணைப்பு கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
  • வாக்காளர் தான் விருப்பப்படும் சின்னத்திற்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக்கான ஒட்டு பதிவாகிவிடும்.
  • அதன்பின் கட்டுப்பாட்டுக் கருவி பிரிவில் உள்ள ஒட்டு பொத்தானை மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய்ய தயார் ஆகும்.
  • இயந்திரத்தின் சாவியை பதிவு செய்யும்போது, தேதியும் நேரமும் பதிவாகிவிடும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், பூட்டுவதர்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரமானது எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது.
  • வாக்கு எண்ணும் மையத்தில், இயந்திரத்தில் உள்ள மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதில் உள்ள வேட்பாளர் என்னையும், அவருக்கு பதிவாகியுள்ள மொத்த ஓட்டுக்களின் எண்ணிகையை திரையில் எண்ணியல் வடிவாக காட்டும்.

உலகிலேயே வாக்குப்பதிவை இயந்திரத்துவமாக்கி தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் தேர்தல் ஆணையத்தை கொண்டுள்ள ஒரே மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது இந்தியாதான். ஆனால் இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தையும் எளிதாக ஹேக் செய்து, குறிப்பிட்ட வாக்காளருக்கான ஒட்டு எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அதுவும் வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்துகொண்டு வெறும் ஐந்தே நிமிடத்தில் இந்த மோசடியை செய்யலாம் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

என்னங்க பாஸ்… ஷாக் ஆகிட்டிங்களா? தொடர்ந்து படிங்க. ஒரு வேளை, இந்த இயந்திரம் ஐந்து நிமிடம் மட்டும் ஹேக்கர் கையில் கிடைக்கிறதென்றால், அதை எவ்வாறு ஹேக் செய்ய முடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

inside_sm

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இரண்டு பகுதிகள் இருக்கும். மெயின் போர்ட் மற்றும் திரை. மெயின் போர்டில் வேட்பாளர்களின் விபரங்களும், ஸ்க்ரீன் போர்டில் வாக்குகளை காண்பிக்கும் திரையும் இருக்கும். இந்த இரண்டையும் Central Processing Unit என்ற பகுதி இணைத்திருக்கும். இதில் கட்டுப்பாட்டு அலகும், இரண்டு மெம்மரி ‘சிப்’களும் அமைந்திருக்கும். வாக்காளர்களின் வாக்குகளை கட்டுப்பாட்டு அலகு வாங்கிக்கொண்டு அதன் எண்ணிக்கையை மெம்மரி ‘சிப்’களில் சேமித்து வைக்கிறது.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *