சம்மரில் முடி கொட்டுதா? அப்ப இதை ஃபாளோ பண்ணுங்க!

வெயில்காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சினை இந்த தலைமுடி உதிர்வது. இதற்கு காரணம் உடலில் வெப்பநிலை அதிகரிப்பதும், அதிகம் வியர்வை வெளியேறுவதும்தான்….

வெயில்காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சினை இந்த தலைமுடி உதிர்வது. இதற்கு காரணம் உடலில் வெப்பநிலை அதிகரிப்பதும், அதிகம் வியர்வை வெளியேறுவதும்தான். கோடையில் மயிர்க்கால்கள் வலிமையின்றி இருக்கும். இந்த நேரத்தில் முடியை சீப்பு கொண்டு அடிக்கடி சீவினால், தலைமுடி அதிகம் உதிர்ந்துவிடும். மயிர்க்கால்கள் ஈரப்பசையுடன் இருப்பதால் தலையில் தூசுக்கள் எளிதாக ஒட்டிக்கொண்டு, கிருமிகளை உருவாக்கிவிடும். இதனால் தலை அரிப்பும், எரிச்சல்களும் ஏற்படலாம்.

குறிப்பாக கோடையில் பெண்களின் டோலோஜின் சற்று அதிகமாக இருக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது. டோலோஜின் என்பது மயிர்க்கால்களை இளைப்பாற்ற வைக்கும் ஒரு வேதிப்பொருள் ஆகும். கோடையில் தலைமுடிக்கும் அதிக அழுத்தத்தை ஏற்படும் செயல்களை செய்யும்போது தலைமுடி அதிகளவில் உதிர்கிறது. இந்த முடி உதிர்தலை தடுப்பதற்கான சில வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

201510-600x450-washing-hair

கோடையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிப்பது சாலச் சிறப்பு. தலையை நன்கு துவட்டி, பிறகு லேசான சூரிய ஒளியில் உலரவைக்க வேண்டும்.

loading...
loading...

download

ஷாம்பு பயன்படுத்துவதை காட்டிலும் முட்டையின் வெள்ளைக்கருவை தலைக்கு தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து பிறகு குளிக்கலாம். இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *