அமெரிக்காவில் இந்த இந்திய வாலிபர் குறித்து துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் டாலர்கள் பரிசு

அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பதுங்கியிருக்கும் இடம் குறித்த துப்பு கொடுத்தால் 1 லட்சம் டாலர்கள் பரிசாக அளிக்கப்படும் என்று அமெரிக்க காவல்துறை அமைப்பான ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பதுங்கியிருக்கும் இடம் குறித்த துப்பு கொடுத்தால் 1 லட்சம் டாலர்கள் பரிசாக அளிக்கப்படும் என்று அமெரிக்க காவல்துறை அமைப்பான ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அறிவித்துள்ளது. அவரது பெயர் பத்ரேஷ்குமார்; வயது 26.

201704191107155412_us2-_l_styvpf
பத்ரேஷ் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள அருண்டெல் மில்ஸ் போல்வார்ட் பகுதியில் உள்ள பிரபல உணவு விடுதியில் பணியாற்றியவர். இவர் கடந்த 2015ம் ஆண்டு தனது மனைவி பாலக் படேலை கொலை செய்துவிட்டு தப்பி தலைமறைவாகியுள்ளார். கடந்த 2 வருடங்களாக போலீசார் பத்ரேஷை தீவிரமாக தேடி வந்தபோதிலும் அவரைப்பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதுவும் கூட இதுவரை தெரியவரவில்லை.

இதையடுத்து பத்ரேஷ் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன். மேலும் இவரை பிடிக்க பொதுமக்கள் யாரேனும் போலீசுக்கு துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 64 லட்சம்) பரிசாக வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *