காதல் கோட்டையான ‘கஜுராஹோ’ பற்றி நீங்கள் அறிந்திடாத உண்மைகள்!

இந்தியாவின் காமசூத்திரத்தை பிரதிபலிக்கும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ள கஜுஹாரோ கோவிலைப் பற்றிதான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தேடும் மூன்று விஷயங்கள் உணவு, உறக்கம், காமம் என உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். காமம் என்பது இனப்பெருக்கத்தின் ஒரு பகுதி என்றால், இன்னொரு பகுதியாக இன்பம் நுகரும் பொருளாக இருக்கிறது. இந்தியாவில் நாகரீகம் தழைத்த காலத்திலிருந்தே காமம் என்பது கொண்டாடப்பட்டே வந்துள்ளது. திருக்குறளிலும் ஆறாம், பொருளுக்குப் பிறகு காமம் என்ற பாலை காமத்துப் பாலாக ஏடுகளில் எழுதினார் வள்ளுவர். பண்டைய தமிழகத்தில் இந்திரன் விழா, காமன் பண்டிகை போன்ற காதல் விழாக்கள் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளதை வரலாறு செப்புகிறது. இந்து மதத்தில் பிரம்மச்சரியத்தை வளர்த்த கோவில்களில் காதல், காமத்தை வெளிப்படுத்தும் வகையில் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவின் காமசூத்திரத்தை பிரதிபலிக்கும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ள கஜுஹாரோ கோவிலைப் பற்றிதான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

121

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோ கோவில்கள் அமைந்துள்ளன. 950ம் ஆண்டு முதல் 1050ம் ஆண்டுக்குள் சந்தேலா வம்ச அரசர்களால் கட்டப்பட்டுள்ளன.

3205364_1365479878577-95res_500_375

20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வளாகத்தில், அப்போது மொத்தம் 85 கோவில்கள் கட்டப்பட்டிருந்தன. இப்போது அங்கே வெறும் 20 கோவில்களே மிஞ்சியுள்ளன. பல்வேறு காலங்களில் நிகழ்ந்த படையெடுப்புகள் மற்றும் போரின்போது பெரும்பாலான கோவில்கள் அழிக்கபட்டன.

1989khajurahofrieze-1

கந்ரிய மகாதேவா கோவிலானது சந்தேலா அரச வம்சத்தின் மிகச்சிறந்த மன்னராக திகழ்ந்த தங்கத்தேவன் என்பவரால் 1030ம் ஆண்டு கட்டபட்டுள்ளது. இக்கோவிலின் உள்ளே மூலவராக பளிங்கு கல்லால் ஆன சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *