‘ஜம்’முனு இருக்கும் கருணாநிதி பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்!

தமிழக அரசியல் வரலாற்றில் தனது பயணத்தை பதிவு செய்திட 92 வயது வரை சுறுசுறுப்பாக பணியாற்றிய அரசியல் தலைவர் கருணாநிதியை பற்றிய கட்டுரை

தமிழக அரசியல் வரலாற்றில் தனது பயணத்தை பதிவு செய்திட 92 வயது வரை சுறுசுறுப்பாக பணியாற்றிய அரசியல் தலைவர் கருணாநிதி என்றால் மிகையாகாது. அரசியல் மட்டுமின்றி தமிழ் இலக்கியம், திரைப்படத் துறைகளிலும் பேரார்வத்துடன் இயங்கியவர். தன்னை கடலில் தூக்கிப்போட்டாலும் மிதக்கும் கட்டுமரமாக இருந்தவர், இப்போது அரசியலிலிருந்து கரை ஒதுங்கியிருக்கிறார். பெரும் ஊழல்கள், கச்சத்தீவு, ஈழப்போர், குடும்ப அரசியல் போன்ற விடயங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தாலும், இந்த கட்டுரையில் அவருடைய இன்னொரு பக்கத்தை எழுத வேண்டியிருந்தது. தொடர்ந்து படியுங்கள்.

karunanidhi_dmk

1. கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற ஊரில், 1924ம் ஆண்டு ஜூன் 3ம் திகதி பிறந்தார்.

2. தனது 14வது வயதில் அரசியல் கருத்துக்களை பெரிதும் விரும்புபவராக, நீதிக்கட்சியின் அழகிரிசாமியின் பேச்சுக்களின் பால் ஈர்ப்பு கொண்டவராகவும் திகழ்ந்தார். இதனால் திருவாரூரில் மாணவர் மன்றத்த எழுப்பி, நீதிகட்சிக்கு வலு சேர்த்தார்.

annadurai_mgr_karunanidhi

3. மாணவர் அணியை மேலும் வளர்ப்பதற்காக, ‘முரசொலி’ என்ற துண்டு பிரசுரத்தை நடத்தினார். பின்னாளில் அணி வளர வளர, முரசொலியும் செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிக்கையாக உருவெடுத்து வெளியானது.

4. சிவாஜிகணேசன் நடித்த ‘பராசக்தி’ படத்தின் வசனகர்த்தா கருணாநிதிதான். இப்படத்தில் சிவாஜியின் நீதிமன்ற வசனங்களே படத்தை தூக்கிப் பிடித்தது. இந்த வசனங்களால் வசூல் வேட்டையில் இப்படம் சக்கை போடு போட்டது. சிவாஜிக்காக பல படங்களில் வசனங்களை எழுதியுள்ளார் கருணாநிதி.

karunanidhi-lt-and-sivaji-ganesan-rt-in-1950s

5. எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் முதல் ப்ரேக் கொடுக்கும் படங்களை வழங்கியவர் கருணாநிதி. எம்.ஜி.ஆருக்கு ‘மந்திரி குமாரி’ படத்தையும், சிவாஜி கணேசனுக்கு ‘பராசக்தி’ படத்தையும் வசனங்கள் நிறைந்த வெற்றிப் படங்களாக கொடுத்தவர் கருணாநிதி.

6. கருணாநிதி எழுதிய ‘தூக்குமேடை’ என்ற நாடகத்தின் மேடையில், கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தினை நடிகவேள் எம்.ஆர். ராதா தன் வாயால் வழங்கினார்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *