வேகமாக பரவி வரும் பிட்காயின் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

சர்வதேச வணிகம் குறித்து நோக்கி வருபவர்களுக்கு பரீட்சயமான வார்த்தைதான் பிட்காயின் (Bitcoin). 1990களின் இறுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்த தொடக்கத்தில் பணப்பறிமாற்றத்தில்…..

ர்வதேச வணிகம் குறித்து நோக்கி வருபவர்களுக்கு பரீட்சயமான வார்த்தைதான் பிட்காயின் (Bitcoin). 1990களின் இறுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்த தொடக்கத்தில் பணப்பறிமாற்றத்தில் பல குளறுபடிகள், மோசடிகள் நடந்தன. 100 ரூபாயை ஒருவருக்கு அனுப்பினால், அனுப்பப்படும் ஃபைலை வைத்து, மேலும் பல பிரதிகள் எடுத்தனர். இதிலிருந்து தப்பிக்கவே பிட்காயின் என்ற மெய்நிகர் பணம் உருவாக்கப்பட்டது. இந்த பிட்காயின்தான் டிஜிட்டல் பரிவர்த்தனையின் முன்னோடியாகவும், அதன் தொடக்கப் புள்ளியாகவும் இருந்தது. பிளாக் செயின் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Bitcoin

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கரன்சி இருக்கிறது. ஆனால் இந்த பிட்காயின் என்பது சர்வதேச கரன்சி ஆகும். எந்த நாட்டிலும் இந்த கரன்சியை மாற்றிக்கொள்ள முடியும். எந்த இடத்திலிருந்தும் இந்த பிட்காயின் மூலம் ஷாப்பிங் செய்ய முடியும். யாருக்கும் எங்கிருந்தும் பணம் அனுப்ப முடியும். இதை கண்டுபிடித்து யார் என்று இன்று வரையிலும் தெரியவில்லை. இதை கண்டுபிடித்தது ஒருவரா அல்லது ஒரு குழுமமா? என்பது கண்டறியப்படவில்லை. ஆனால் சந்தோஷி நகமோடோ என்ற பெயரில் பிட்காயின் மற்றும் அதன் மென்பொருளை வெளியிட்டார்கள். இதன் மூலம் ஒருவர் யாருக்கும்? எந்த நாட்டில் வசிப்பவருக்கும் பணத்தை அனுப்ப முடியும். இந்த பரிவர்த்தனையை மூன்றாவது நபர் யாராலும் கண்டுபிடிக்க இயலாது. திருடவும் முடியாது. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரிவர்த்தனைகளை நிகழ்த்தித் தரும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என்று பெயர்.

20130512_btc
பிட்காயின் பரிவர்த்தனையை விவரிக்கும் வரைபடம்

உலகம் முழுக்க ஒவ்வொரு வினாடிக்கும் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இதனை நிகழ்த்தும் பிளாக்செயின் இயக்க தளமானதின் பரிவர்த்தனைகள் அனைத்தும் புதிர் வடிவிலே இருக்கும். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் நடக்கும் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஒரு லட்ஜரில் பதிவேற்றப்படும். அடுத்த பத்து நிமிடங்களுக்கு நடக்கும் பரிவர்த்தனைகள் அடுத்த லெட்ஜரில் பதிவேற்றபடும். மைனிங் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் 12.5 பிட்காயின்கள் வழங்கப்படும். சமீபத்தில்தான் ஐசிஐசிஐ உள்ளிட்ட சில பிரபல வங்கிகள் பிட்காயின் பரிவரிதனைகளுக்கான சோதனைகளை நடத்தியன.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *