பெண் வீட்டார் மாப்பிளையிடம் எதிர்பார்க்கும் 6 முக்கிய விஷயங்கள்!

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். இந்த பயிரை அறுவடை செய்வதற்குள், அதாவது நடத்தி முடிப்பதற்குள் ஜென்மம் முடிந்துவிடும். பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து, நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, திருமணம், வரவேற்பு ….

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். இந்த பயிரை அறுவடை செய்வதற்குள், அதாவது நடத்தி முடிப்பதற்குள் ஜென்மம் முடிந்துவிடும். பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து, நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, திருமணம், வரவேற்பு விழா வரை ஒரு வாரத்திற்கு பிஸி, மகிழ்ச்சி, டென்ஷன், வேலைப்பளு எல்லாமே கலந்துக்கட்டி அடிக்கும். மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் சரிசம இணைப்பு ஏற்படும் தருணமே சுவாரசியமாக இருக்கும். இரு வீட்டாரிடமும் உள்ள எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும்? என்பதை யோசிப்பதுவும் கூட மயிர்கூச்சரியும் தருணமாக திகழும். இந்த கட்டுரையில் பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் என்ன எதிர்பார்ப்பார்கள்? என்பதை எடுத்துக் கூடுகிறது.

வேலை & சம்பளம்:

11-sneha-prasanna-reception-110512-jpeg
பெண் பார்க்கும் படலத்தில் பெண் வீட்டாரின் முதல் விருப்பமே மாப்பிள்ளை நல்ல வேலையில் இருக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். மாப்பிள்ளை எந்த ஊரு? மாப்பிள்ளை பேரு? எங்க வேலை செய்யுறாரு? என்றுதான் கேட்பார்கள். நல்ல சம்பளம் வாங்குகிறாரா? என கேட்பதற்குள் மாப்பிள்ளை இவ்வளவு வாங்குகிறார் என்று சொல்லிவிட்டால், பெண் வீட்டாரின் வாயெல்லாம் பல்லாக தெரியும்.

சொத்து & பணம்:

7
பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் வேலை, சம்பளத்தை விட அதிகம் எதிர்பார்க்கும் விடயமாக சொத்துப்பத்துகள் இருக்கிறது. மாப்பிள்ளை வேலையை விட்டாலும், வீட்டில் உட்கார்ந்து சாப்பிட முடியுமா? என்பதை ஜென் லெவலில் யோசிப்பார்கள். வாழச் செல்லும் வீட்டில் நம் பெண்ணின் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வரக்கூடாது என தவம் இருப்பார்கள். சொத்து, வங்கிப்பணம் விடயங்களில் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பார்கள்.

படிப்பு:

karthi_sivakumar_ranjani_marriage_photos_10
படிப்பு கிடக்குது கழுத; மாப்பிள்ளை எங்கே வேலை செய்யுறாரு? எவ்வளவு வாங்குறாரு? என்ன பிசினஸ் செய்யுறாரு? எவ்வளவு காசு பாக்குறாரு? காலம்பூராவும் என் பொண்ண உட்கார வச்சி சோறு போட்டால் போதும் என்றே 90% பெண் வீட்டார்கள் சொல்லுவார்கள். இருப்பினும் பெண்ணை விட மாப்பிள்ளை அதிகம் படித்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *