இந்து மதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் என்ன வித்தியாசம்? ‘நச்’ பாய்ண்ட்கள் உள்ளே…!!

இந்து மதம் மிகப்பழமையான மாபெரும் மதங்களுள் ஒன்றாகவும், அதே நேரத்தில் பல கேள்விகளையும், விளக்க இயலாத சந்தேகங்களையும் கொண்டிருக்கும் விடை தேடவியலா மதமாக புலப்படுகிறது. இந்த பார்வை சிக்கல்களுக்கு காரணம் இந்து மதத்துடன் இந்துத்துவா கொள்கைகள் கலந்தததுதான் காரணம். விளக்கமாக சொன்னால், கி.பி. 1794ம் ஆண்டிற்கு முற்பட்ட இந்திய இலக்கியங்களில் எவற்றிலுமே இந்து மதம் என்ற பெயர் இருக்காது. பௌத்தம், சமணம், சைவம், வைணவம், சீக்கியம் ஆகிய ஐந்து மதங்களில் சைவம்-வைணவம் இரண்டு மதங்கள் மட்டும் ஆரியர்களின் சாதி ஏற்றத்தாழ்வு கொள்கைகளுடன் கைக்கோர்த்தன. அந்த சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைகளுக்குத்தான் தனது புத்தகத்தில் ‘இந்துத்துவம்’ என்று புதிய பெயரைக் கொடுத்தார் சர் வில்லியம் ஜோன்ஸ். ஆகவே இந்து மதம் என்பதும், இந்துத்துவா என்பதும் வெவ்வேறு கோட்பாடுகளை உடையதாகும்.

கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் வேறுபாட்டு அட்டவணை உங்களுக்கு இந்து-இந்துத்துவம் குறித்த பார்வையை தெளிவாக்கும். தொடர்ந்து படியுங்கள்…

இந்து மதம்: சைவம் மற்றும் வைணவ மதங்களின் கூட்டிணைப்பு
இந்துத்துவம்: ஆரியர்களால் கொணரப்பட்ட சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை

இந்து மதம்: உலக அளவில் எல்லோருக்கும் பொதுவான மதம். யார் வேண்டுமானாலும் இந்து மதத்தை பின்பற்றலாம்; மாறலாம்.
இந்துத்துவம்: ‘இந்துக்களுக்கு மட்டுமே’ என்ற கொள்கையை உடையது. சாதி அடிப்படையில் பிரித்தாளும் கோட்பாடுகளை வலியுறுத்துவது.

hinduworshippers-58d2a7dc5f9b584683b3351d

இந்து மதம்: மக்கள் சுதந்திரமானவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. இந்து மதத்தை சார்ந்த எவரும் தங்கள் மதத்தை தாராளமாக விமர்சிக்கலாம். தங்கள் கருத்தை பொதுத்தளத்தில் வைக்கலாம்.
இந்துத்துவம்: இந்துத்துவம் தனித்துவம் வாய்ந்தது. மத எதிர்ப்புக் கொள்கைகளுக்கு வழிவிடுவதில்லை.

இந்து மதம்: இந்தியாவில் 80%க்கும் மேலானவர்கள் இந்துக்கள்.
இந்துத்துவம்: இந்துக்களில் இந்துத்துவாவை ஆதரிப்பவர்கள் சிறுபான்மையினரே.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *