‘பாகுபலி2’ 5வது நாள் பாக்ஸ் ஆபீஸ் பிரமாண்ட வசூல்!

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமான அளவில் வெளியாகி வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. சில விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தாலும்

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமான அளவில் வெளியாகி வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. சில விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தாலும், கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதற்கு விடை காணவே பெருவாரியான மக்களும் தியேட்டரை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். நான்காவது நாளான நேற்றுடன் இப்படம் 620 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இன்று ஐந்தாவது நாளில் 710 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வசூல் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

fullscreen-capture-3162017-40316-pm-bmp

  • Net – 440 Crs
  • Gross – 565 Crs
  • Overseas – 145 Crs
  • Total – 710 Crs

இப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ், கடந்த ஐந்து வருடங்களாக இப்படத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துள்ளார். அவர் வேறு எந்த படத்திலுமோ, விளம்பரத்திலுமோ நடிக்கவில்லை. முதல் பாகத்திற்கு அவர் பெற்றது வெறும் 20 கோடி ரூபாய் மட்டுமே. இதனால் ஒரு சமயத்தில் அவருக்கு பண கஷ்டம் வந்ததாம். அப்போதும் கூட, ராஜமௌலியின் ஒரே வார்த்தைக்காக தான் வேறு படங்களில் அல்லது விளம்பரங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் கடன் வாங்கி தனது உடலை பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக தயார் படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *