மேஷ ராசியில் பிறந்தவரா நீங்கள்? உங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்

மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை, தொழில், கல்வி, திருமணம் குறித்த அம்சங்களை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.

நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும், நிமிர்த்த நடையும், நீண்ட புருவமும், அழகான பல்வரிசையும், அடர்த்தியான தலைமுடியும் என வர்ணிக்கப்படக் கூடிய அழகுடன் திகழும் மேஷ ராசிக் காரர்களே…

ராசிகளில் முதல் ராசியாக திகழும் உங்கள் ராசியின் அதிபதியானவர் அழகு தமிழ்க் கடவுள் முருகன். அஸ்வினி, பரணி, கிருத்திகை, பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இந்த ராசியைக் கொண்டிருப்பார்.

vijay_temple

நடிகர் விஜய்யின் ராசியும் மேஷ ராசியே. பெரும்பாலான படங்களில் அவர் முருகன் கோவில் காட்சிகள் வைப்பதன் பின்புல சென்டிமென்ட் ராசிதான்.

மேஷ ராசியில் பிறந்தவர்கள், பார்ப்பதற்கு பொறி உருண்டை போல காணப்பட்டாலும், எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள். தெய்வமே கண்ணில் ஜலம் வைக்கும் அளவிற்கு தெய்வ பக்தியும், தெய்வீகமும் நிறைந்தவராக இருப்பார்கள்.

வார்த்தை ஜாலங்களில் பின்னி பெடலெடுத்து விளையாடக் கூடியவர்களான நீங்கள், வாக்கு வன்மையால் பிறரை திணறடித்து, ‘நீங்கள் செய்ததுதான் சரி’ என சொல்ல வைத்து விடுவீர்கள். ஹியூமர் நிறைந்த வார்த்தைகளால் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிறுவலி ஏற்படும். அந்த அளவிற்கு வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பீர்கள்.

விதி எந்த சந்தில் பூந்து விளையாண்டாலும், அதன் தாக்கங்களை தாங்கிக் கொல்லும் திறன் கொண்டவரான நீங்கள், வலிகளை உடனே மறந்துவிடும் மனோதிடத்தையும் கொண்டிருப்பீர்கள்.

மேஷ ராசி என்றால், குடும்பத்தில் எப்போதும் சிக்கல்கள், குழப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். கணவன் – மனைவி இடையே அனுசரிப்பு என்பதை நினைத்துக் கூட பார்க்கக்கூடாது. குடும்பத்திற்காக எவ்வளவு பாடுபட்டாலும், அவர்கள் உங்களை புரிந்து கொள்வது என்னவோ, கேள்விக்குறியாகத்தான் இருக்கும். இருப்பினும் உழைப்பதை நிறுத்திவிடாதீர்கள். உங்களை வரலாறு பேசும்.

வருங்காலத்திற்காக சேமித்து வைக்கும் அளவிற்கு வருமானம் இருக்காது என்றாலும், போதிய பண வசதியுடன் வாழ்க்கயை நகர்த்துவார்கள். தானம், தர்மம் என யோகி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் உங்களை மற்றவர்கள் எளிதில் ஏமாற்றிவிடுவார்கள். கடைசி வரை வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் பெற்று பெருவாழ்வு வாழ முடியாமலே போய்விடும் என எண்ணுவதை விட்டுவிட்டு, இந்த தருணத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சியுங்கள்.

அலுவகத்தில், உங்களுக்கு பின் சேர்ந்தவர்கள் உங்களையும் முந்திச் செல்லலாம். உங்களது பணித்திறமையை முதலாளி புரிந்துகொள்ளவில்லை என வருத்தப்படும் நேரத்தை வீணாக்காமல் உழைப்பை கவனமுடன் செலுத்தினால், சில நாட்களில் அரியாசனமே உங்களுக்கு கிடைக்கும்.

ரிஸ்க்கேல்லாம் உங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரிதான். ஆனால் அந்த ரஸ்க் சில நேரங்களில் உங்கள் பல்லை உடைத்துவிடும். ரிஸ்க் எடுக்கும்போதும் கூட ஜாக்கிரதையுடன் எடுக்க வேண்டும்.

எந்த செயல்களிலும் சுயநலம் பாராமல், பரந்த நோக்கத்துடன் இறங்கும் உங்களால் தொழிலையும் வெற்றிகரமாக நடத்திட முடியும். எடுத்த காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருந்து அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

உங்களுக்கான உணவுகள்:
கீரைகள், வெங்காயம், கிழங்குகள், வெள்ளரி, பரங்கிக் காய், அவரைக்காய், எலுமிச்சை, வால்நட் போன்ற உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டால் உங்களது ஆரோக்கியம் சிறப்பானதாக விளங்கும்.

நட்பு ராசிகள்: மிதுனம், சிம்மம், தனுசு, மிதுனம், கும்பம்
எதிரி ராசிகள்: கடகம், விருச்சிகம், மீனம்
சமமான ராசிகள்: ரிஷபம், கன்னி, மகரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *