மோடி வேடத்தில் நடிக்கும் அக்ஷய் குமார்!

அக்ஷய் குமார் புதிய படத்தில் பிரதமர் மோடியின் கதாபாத்திரத்தை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது தொழில்துறையில் தனக்கான பொறுப்பான ஒரு இடத்தை பிடித்துள்ளார். தனது படங்கள் மூலம் பல நல்ல கருத்துகளையும், நாட்டு நடப்புகளையும் பிரதிபலித்தும் வருகிறார். குறிப்பாக தலைவர்கள் பலரது கதாபாத்திரங்களும் ஏற்று நடித்துள்ளார். அவர் நடிக்க உள்ள புதிய படத்தில் பிரதமர் மோடியின் கதாபாத்திரத்தை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

2819akshay-1491634817

மேலும் தற்போது அக்ஷய் நடித்துள்ள ‘டாய்லெட்’ படம் விரைவில் வெளியாகவும் உள்ளது. தமிழில் நாம் ரசித்த ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் கதைக்களத்தை ஒத்த கதைதான் டாய்லெட். இப்படத்திற்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் நடப்பு அரசியலை மையாமாக கொண்டு உருவாக இருக்கும் படத்தில் அக்ஷய் குமார் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என பல பிரபலங்களும் தெரிவித்துள்ளனர். அக்ஷய் குமாரால் மோடியின் கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக நடித்திட முடியும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *