வாவ்….காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கலாமா??? இது ஒரு சோலார் சாதனை!!!

சோலார், அதாவது சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, தண்ணீரை சூடாக்கவும், மின்விளக்குகளை எரிய வைக்கவும் முடியும். இப்போது சோலார் மூலம் குடிநீரையும் உற்பத்தி

சோலார், அதாவது சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, தண்ணீரை சூடாக்கவும், மின்விளக்குகளை எரிய வைக்கவும் முடியும். இப்போது சோலார் மூலம் குடிநீரையும் உற்பத்தி செய்ய முடியும் என நிரூபித்துள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த ஏர்சோலார்வாட்டர் நிறுவனத்தினர். குறிப்பாக கோடைக்காலத்தில் அதிகளவு நீரை உற்பத்தி செய்கிறது இந்த சோலார் வாட்டர் இயந்திரம். காற்றின் ஈரப்பததை உறிஞ்சி, அதை குடிநீராக மாற்றுகிறது இந்த இயந்திரம். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? வாங்க அந்த இயந்திரம் எப்படி செயல்படுகிறது என பார்ப்போம்.

3-4-2b

  • இரவில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதை உப்பு கலவையின் உதவியுடன் ஒரு கலனில் சேமித்து வைக்கப்படுகிறது.
  • உறிஞ்சப்படும் காற்று வடிகட்டப்பட்டு, சுத்தமான காற்று மட்டுமே இயந்திரத்திற்குள் செலுத்தப்படும்.
  • ஈரப்பதமானது நீராவியாக மாறி, அதிலிருக்கும் உப்புத்தன்மை சூரிய வெப்பத்தால் நீக்கப்படுகிறது.
  • நீராவியானது இன்னொரு கலனில் தேக்கப்பட்டு, பின் இயற்கை முறையில் குளிர்விக்கப்படுகிறது. பின்னர் சுத்தமான குடிநீர் நமக்கு கிடைக்கும்.
  • இந்த இயக்கங்களுக்காக சிறிதளவு மின்சாரம் தேவைப்படும். பகலில் சூரிய வெளிச்சத்தில் சேகரிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இந்த வேலைப்பாடுகள் நடக்கின்றன.
  • ஒரு சிறிய சோலார் வாட்டர் இயந்திரமானது ஒவ்வொரு நாளும் 5 லிட்டர் வரையிலான குடிநீரை உற்பத்தி செய்கிறது.
  • சோலார் கருவியின் அளவுக்கு ஏற்பவாறு தண்ணீர் உற்பத்தித் திறனும் வேறுபடுகிறது.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *