சென்னையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்!

அப்பல்லோ மருத்துவமனை முதல்முறையாக சென்னையில் வான்வழி ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளது.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை தமிழர்களிடம் நல்ல பரீட்சையப்பட்ட மருத்துவமனைதான். இந்த மருத்துவமனை முதல்முறையாக சென்னையில் வான்வழி ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளது.

இத்திட்டத்திற்கான துவக்கவிழா சென்னை லயோலா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. அப்பல்லோ நிர்வாக இயக்குநர் ப்ரீத்தா ரெட்டி, தமிழக சுகாதார துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

air-ambulance-884195803_v2-grid-6x2295

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை முதலில் காரைக்குடி, கரூர், திருச்சி, மதுரை மற்றும் சென்னை நகரங்களை இணைந்து வழங்கப்படும். தொலைவுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை கட்டணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் மற்றும் இரண்டு மருத்துவர்கள் நோயாளியுடன் இருப்பர். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *