‘ஆசிவகம்’ ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை!

‘ஆசிவகம்’ என்ற சொல். இதுவே தமிழர்களின் ஆதி மதம் என்றும், இது பண்டய இந்தியாவிற்குள் நுழைந்த பிற மதங்களால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டதென்றும் கூறப்படுகிறது

இணையங்களில் உள்ள தமிழ் பற்றாளர்களால் அதிகம் விவாதிக்கப்படும், அதே சமயத்தில் வெளியில் அதிகம் அறியப்படாத பொருளாக திகழ்கிறது ‘ஆசிவகம்’ என்ற சொல். இதுவே தமிழர்களின் ஆதி மதம் என்றும், இது பண்டய இந்தியாவிற்குள் நுழைந்த பிற மதங்களால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டதென்றும் கூறப்படுகிறது.

ஆசிவகமும் அய்யனாரும்:
தமிழர்களின் ஆதி சமயம் என விவரிக்கப்படும் சமயமே ஆசிவகம் என பண்டைய வரலாறுகள் செப்புகின்றன. இன்று ஊர் கோடியிலும், எரிக்கரையிலும் அமர்ந்துள்ள அய்யனார் சாமியே இந்த ஆசிவக சமயத்தை தோற்றுவித்தவர்கள் எனவும், அய்யனார் என்பவர் ஒருவர் அல்லர்; மூவர் எனவும் சங்க கால ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அய்யனார் எனப்படுபவர்கள் சங்ககால புலவர்களே என சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

maxresdefault

மூன்று பகுதிகள்:
ஆசிவகமானது பண்டைய தமிழர்களின் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்ததை அமெரிக்க இந்தியவியல் அராய்ச்சியாளர் அறிஞர் ஹென்ரிக் ராபர்ட் ஜிம்மர் தனது ;இந்திய தத்துவவியல்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இந்த ஆசிவகம் மூன்று முக்கிய பகுதிகளை ஒன்றிணைப்பதாகும். அவை:- ‘அணுக்கொள்கையியல்’, அறிவியல் பூர்வமான ‘தர்க்கவியல்’, உலக நியதி எனப்படும் ‘ஊழியல்’ என மூன்று பிரிவுகளாகும்.

எதை வலியுறுத்தியது?
ஆசிவகம் தமிழர்களின் சமயமாக, சாதியற்ற சமூகமாக, கடவுள் வழிபாடற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்தை உருவாக்கிடக்கூடிய சமயமாக வளர்ந்தது. மக்களை துன்பங்களிலிருந்து, போர்க்கால நெருக்கடியிளிருந்தும் காத்து ஆறுதல் தரும் பாரிய அமைப்பாக வளர்ச்சியுற்றது ஆசிவகம். இந்த வகையில் மக்களின் செல்வாக்கு மிகுந்த சமயமாக மாறியது.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *