தமிழக வானிலை : 2 நாட்களுக்கு வெளியே வராதீர்கள்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குறைவாகவே இருக்கிறது. ஆனால் அடுத்த 2 நாட்களில் சென்னையில் வெப்பநிலை தாறுமாறாக உயர இருக்கிறதாம். அதிகபட்சம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai-heat_0_0_0_0

குறிப்பாக சென்னையில் மட்டும் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்த 2 நாட்களுக்கு வயதானவர்கள், குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *